Posts

Showing posts with the label பொது

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்

எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog  என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork  Muse  என்பதாகும்.      படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது.              சமூகவியல் பேராசிரியராகிய  ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய   The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்த...

பேயோட்டும் வழி

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை எந்த அளவிற்கு இணைக்கின்றனவோ அதே அளவிற்கு சில புதிய சிக்கல்களையும் கொண்டு வருகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நானும் இந்தப் பலரில் ஒருவன் தான். விலைமதிப்பற்ற பொழுதுகள், படைப்புத்தருணங்கள் அலைபேசி திரையில் வரும் சில செய்தி அறிவிப்புகளால் வீணாகியிருக்கின்றன.  நானும் இந்தச் செய்தி அறிவிப்புகளை என் அலைபேசியின் ஹோம்ஸ்கிரீனிலிருந்து விலக்க என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். மாணவர்களையும் கேட்டேன். எதுவும் நடக்கவில்லை.  இன்று அபிஷேக்கிடம் கேட்டபோது அவன் இந்த பேயை மரத்தில் எப்படி ஆணி அறைந்து கட்டி வைப்பது என்று அதனிடமே கேட்டான். google அறிவிப்புகளை எப்படி நிறுத்துவது என்று கூகுள் செய்து கேட்டான். என்னை இப்படிக்கட்டிப் போடலாம் என்று பேயே வழியையும் சொல்லிக் கொடுத்தது.  நம்முடைய அலைபேசியில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள் செல்ல வேண்டும். அதில் அதர்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள்ளும் செல்ல வேண்டும். அதி...

இவர்கள் வாழ்ந்தார்கள்

எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதையில் இப்படி ஓர் இடம் வருகிறது. அவருடைய வீட்டிற்கு இரண்டு இளம் அதிகாரிகள் வருகிறார்கள். ஒருவர் வங்கியின் மேலாளர், மற்றொருவர் அக்கவுண்டன்ட். . அக்கவுண்டன்ட் முகத்தை பார்த்தவுடன் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்று எஸ் எல் பைரப்பாவிற்குத் தோன்றுகிறது. ஆனால் எங்கே என்றுதான்  நினைவிற்கு வரவில்லை. தான் ஒரு நடுத்தரவர்க சம்பளதாரர் என்று எவ்வளவோ கூறிய நிலையிலும் அந்த அக்கவுண்டன்ட் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று எஸ் எல் பைரப்பா அவர்களை மிகவும் வற்புறுத்த வேறு வழியே இல்லாமல் இவரும் சம்மதிக்கிறார். ஒரு நாள் காலை தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ் எல் பைரப்பா அவர்கள் சென்றபோது அககவுண்டன்ட் வர காலதாமதம் ஆகிவிட்டது. 13 நிமிடங்கள் கால தாமதமாக வங்கிக்கு வந்த அந்த இளம் அதிகாரி அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு தம்முடைய பணியை ஆரம்பிக்கிறார். அப்போதுதான் அந்த இளம் அதிகாரி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மகன் என்று எழுத்தாளர் எஸ் எல் பைரப்பா அவர்களுக்குத் தெரிய வருகிறது.  இவர்கள் வாழ்ந்தார்கள்,  இவர்...

கையசைத்துச் செல்கிறது காலம்

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காலத்தில் வந்த தேர்தல் முடிவுகளையொட்டி ஜெயலலிதா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டுவிட்டு வந்து நான் என் அப்பாவிடம் பரபரப்பாகக் கூறினேன். அப்பா வரட்டும்,வந்து ஆட்சி செய்து காட்டட்டும் ! என்று எரிந்து விழுந்தார்.           அடுத்த தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆட்சிதான் ! என்று என் மகன் மூன்று மாதங்களுக்கு முன்பு தெரிந்தோ தெரியாமலோ சொன்னபோது எனக்கும் எரிச்சலாக இருந்தது என் அப்பாவைபோல!  அப்பாவின் இளம் வயதிலேயே அவருடைய அப்பா ‌ காலமாகிவிட்டார். அறிஞர் அண்ணா இறந்த நாளில் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ஒரு லாரியில் தொற்றி ஏறி ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் கேம்ப் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்து அண்ணாவின் உடலைப்  பார்த்துவிட்டுப் போன என்னுடைய அப்பாவைப்  பற்றி அலுவலகத்திலேயே சட்டையை கழற்றி விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அளவு மரபு வழிப்பட்ட என்னுடைய தாத்தா அறிந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்னைப் போலவும் என்னுடைய அப்பாவை போலவும் அவரும் எரிச்சலடைந்திருப்பாரா என்ன?     எங்கள் வீட்ட...

சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.  இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது.           அருஞ்சொ...

மழையில் நனைகிறார். எஸ். ரா

முன்பு சாருவிற்கு நடந்தது இப்போது எஸ்ராவிற்கு நடக்கிறது. யாருக்கு நடந்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ஏறக்குறைய ஓராண்டு இருக்கும். சாரு கவிதைகளாக எழுதி அவருடைய இணையதளத்தில் வெளியீட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவருடைய இணையதளத்தில் ஒரு கவிதை பிரசுரமாகியிருக்கும். தற்போது எழுத்தாளர் எஸ்.  ரா வின் சிறுகதைகள் தொடர்ந்து  அவருடைய இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.          எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் சிறுகதைகளில் கிராமம் என்றும் நகரம் என்றும் சொல்ல முடியாத சிற்றூர்கள், அங்கு எளிய நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒருவித மாயத்தன்மையுடன் புனைவாகிறது. உதாரணமாக கிளி ஜோதிடம் சொல்லும். ஒருவரின் கதையை எடுத்துக் கொள்ளலாம்.  ஒருவருடைய கிளிக்கூண்டு காணாமல் போகிறது. ஒரு புதிரான முறையில் அது திரும்பக் கிடைக்கிறது. ஓராண்டு  முன்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் ஓர் அரசு அதிகாரியின் வாழ்க்கையை எஸ். ரா எழுதிக் காட்டியிருந்தார். அவ்வாறே ஒரு தங்கும் விடுதியில் காவலராக பணிபுரியும் ஒருவரின் கதையையும்  எழுதியிருந்தார். ...

திரு. சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி

உயிர்க்காடு தொகுப்பிற்கு திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். மதிப்புரை அவருடைய வலைப் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இணையத்தில் தற்செயலாக இன்று வாசிக்கக்கிடைத்தது. ஓர் இனிய நினைவு!  முற்றிலும் தற்செயலானது. அதனால்தான் இவ்வளவு இனிக்கிறது! 

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

பல்கலைக்கழகத்தில் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் இருந்து என்னுடைய நூல்களை கொண்டு வந்து மாணவர்கள் அடுக்கி வைத்தார்கள். என்னுடைய அறையில் இடம் இல்லை என்பதால் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் ஒரு பீரோ நிறைய என்னுடைய நூல்களை வைத்திருந்தேன். இன்று ஜனவரி 24, 2026 காலை 10 மணி முதல் இந்த வேலைதான். நூல்கள் அடுக்கப்படும்போது  சிலவற்றை எடுத்து தலைப்பைவாசிக்கவைத்துக் கேட்டேன். ஏதேதோ நினைவுகள்.            என்னுடைய அப்பா எனக்காக வங்கியில் ஆர் டி போட்டு புத்தக கண்காட்சிக்கு பணம் கொடுக்கும் ஞாபகம், புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகு அம்மா புத்தகங்களில் என் பெயரையும் வாங்கப்பட்டதேதியையும் எழுதி வைக்கும் திருவிழா ஞாபகம் அபிதான சிந்தாமணி வீட்டிற்கு வந்த ஞாபகம், பகவத் கீதையின் முதன்மையான உரைகளை விஸ்வநாதன் சார் வாசிக்க எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து கொடுத்த ஞாபகம்.  மாணவர்கள் சில புத்தகங்களை ஆசையுடன் கேட்டு எடுத்துச் சென்றார்கள்.            நாலாயிரத் திவ்ய பிரபந்த நூல் தொகுதியில் ஒரே ஒரு நூல் மட்டும் எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட...

நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி

நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம்.  நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ள...

நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன்

எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமியும் இணைந்து  ஒரு நாள்  கருத்தரங்கை நடத்துகின்றன.  டிசம்பர் 12 2025 வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.         எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மூன்றாவது நாவல் அனாதை. இந்த நாவலை இருத்தலியல் நோக்கில் அணுகியிருக்கிறேன். தங்கப்பனை  கதிர் நோக்கா கையிருள் என்று வரையறுத்திருக்கிறேன். கை என்ற சொல்லுக்கு சிறுமை என்றும் பொருள் உண்டு. கைக்கிளை என்பதற்கு  சிறிய உறவு என்பதாகத்தான் நம் இலக்கணமரபு விளக்கம் கொடுக்கிறது .         புத்தம் வீடு நாவல் குறித்து நண்பர் சுப்பிரமணி  இரமேஷ் ஒரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். புத்தமிடு நாவலை நான் இந்த சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பது அன்புத் தோழி பேராசிரியர் ஜெ சுடர்விழியின் கட்டளை. ஒரு மிகச் சிறந்த நாவல் ஒன்றை  படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது         புத்தம் வீடு ஒரு கிளாசிக் ...

ஓர் உரை ஒரு கட்டுரை

நம்முடைய துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் புதன் வட்ட நிகழ்வில் இன்று 20 நவம்பர் 2025 அன்று யு. ஆர். அனந்த மூர்த்தியின் 'திவ்யா' நவீனத்துவத்திற்கும் அப்பால் என்னும் பொருளில் இன்று உரையாற்றினேன். பொதுவாக புதன்கிழமை தோறும் நடைபெறுவதால் நிகழ்வின் பெயர் புதன் வட்டம்.  முழு கட்டுரையும் கையில் இருந்தது.‌ தொடர்ந்து மாணவர்கள் சிறப்பான விவாதத்தை முன்னெடுத்தார்கள். அனந்த மூர்த்தி, சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் குறித்தெல்லாம் விவாதம் நிகழ்ந்தது.  மிகவும் நிறைவான இனிமையான நாள் இது! 

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

அந்தக் கரம் அந்த மனம்

ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும்  போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால்  ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.  பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்   பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.  எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது  அம்மாவின் பார்வையிலிருந்து   தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.  பட்டாசு ...

தித்திக்கும் தருணங்கள்

ஆசிரியர் தீ . ந.  ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே"   நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது.  உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்"  செய்து நூலாக வெளியிடலாம்.  என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.  குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கட...

நேற்று கிடைத்த அரு மணி

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை. குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம்  வாசகி பற்றி  ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது?  அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி  கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா‌. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது.  காவியம்  நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்ப...

பெண்ணுண்டோ மனோண்மணியே

குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களைப் படித்திருக்கிறேன், பாடம் நடத்தியிருக்கிறேன். அண்மையில் வாசித்தத் தமிழ் விக்கி பதிவு ஒன்றில்  என்னை விட்டால் உனக்கு எத்தனையோ பேர் மாப்பிள்ளைமார்,  உன்னை விட்டால் எனக்கு பெண் உண்டோ மனோன்மணியே!  என்று எழுதியிருப்பதாக நினைவு.   அந்த நிமிடத்தில் இவரை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது.  குணங்குடியார் சென்னையில் தான்அதிக காலம் வாழ்ந்திருக்கிறார். சென்னையில் 14 ஆண்டுகள் அவர் தியானத்தில் இருந்தார் என்பது ஐதீகம்   தொண்டியிலிருந்து  வந்து தங்கிய இடம் தொண்டியார் பேட்டை என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் அது தண்டயார் பேட்டை என்று மாற்றமடைந்ததாக அறிகிறேன். அப்படி என்றால் குணங்குடியாரின் தர்கா தண்டையார்பேட்டையில் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துத் தேடியபோது அது பழைய வண்ணாரப்பேட்டையில் இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டியது. நேற்று ஜனவரி 13 திங்கட்கிழமை மாலையில் புறப்பட்டோம்.   அம்பத்தூரிலிருந்து வழக்கமான பாதையில் செல்ல முடியவில்லை.  காரணம் மெட்ரோ பணி. அம்பத்தூரில் இருந்து மது...

அரிமா நோக்கு இதழுக்கு நன்றி

ஹரன் பிரசன்னா ஆக்கங்களில் மாத்வத்துறவியரும் துறவுசார் ஒழுகலாறுகளும் என்ற என் கட்டுரை அரிமா நோக்கு இதழில் வெளி வந்திருக்கிறது. ஹரன் பிரசன்னா எழுதிய மாயப் பெருநதி என்ற நாவலையும் புகைப்படங்களின் நடுவே, சா தேவி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இவற்றில் உள்ள மாத்வ வாழ்வியலையும் மாத்வ துறவிகள் குறித்த செய்திகளையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறேன். கல்விப்புல பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரை. சற்றேறக்குறைய ஆறு மாத்ஙகளுக்கு முன்பு அரிமா நோக்கு இதழுக்கு கட்டுரையை அனுப்பி வைத்தேன். ஜனவரி 2025 இதழில் வெளிவந்திருக்கிறது. என் கட்டுரையை பரிசீலித்து வெளியிட்ட பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.‌

ஒரு பேரலை

2024 விஷ்ணுபுரம் விழாவிற்காக சில மாதங்களாகவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பல நூல்கள்  விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் முன்பு தான் கிடைத்தன.   எப்படியோ கையில் இருந்த நூல்களை எல்லாம் படித்து விட்டேன் ‌ அவ்வாறு படித்துவிட்டு விழாவிற்கு சென்றது நிறைவாக இருந்தது.  டிசம்பர் 16 முதல் 20 வரை படித்த நூல்கள்  துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிராஜா  100 ரூபில்கள் மயிலன் ஜி சின்னப்பன்  பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி சின்னப்பன்  மண்டோவின் காதலிகள் லாவண்யா சுந்தர்ராஜன் ஆரண்யம்  கயல்  ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கயல்  பொற்பனையான் சித்திரன்  ஒரு பேரலையில் சறுக்கி விளையாடக் கிடைத்த ஒரு வாரம். 

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்!  விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின்  வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள்.  . அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்..  நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது.  இதற்காக அவர் செலவிடும்  நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன்....

‌‌ தொடங்கி விட்டேன்

அம்மா பற்றி நினைவுகளை ஒரு நூலாக எழுத வேண்டும் என்று நண்பர் க. ஜவகர் கேட்டுக்கொண்டார். எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது. நண்பர் ஜவகரின் சொற்கள் அந்த எண்ணத்திற்கு மேலும் உத்வேகம் கொடுத்தன. அம்மாவின் வாழ்க்கை ஏன் முக்கியம்? இரண்டு ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்க அவள் மேற்கொண்ட சலிப்பில்லாத முயற்சிக்காக தனக்குள் இருக்கும் ஒளியை கடைசி வரை தக்க வைத்துக்கொண்ட சாதனைக்காக ஆர்வம் மிக்க மாணவியாகத் தன்னை அவள் முன்வைத்த இயல்புக்காக.  நான் பிறந்தது பரமக்குடியில். அம்மா பற்றிய நினைவுகளை பரமக்குடி, சென்னை, குப்பம் ஆகிய மூன்று ஊர்களை மையமிட்டு  எழுதும் திட்டம்.  அவளின் இளமை வாழ்வை, குழந்தைமையை அறிந்து கொள்ள அவளை விட வயதில் பெரிய அத்தையிடமும் என் சித்தியிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.  என் அலைபேசியில் இருக்கும் கீப் நோட்ஸ் செயலியில் குரல் வழியே தட்டச்சு செய்த பிறகு கணினியில் எடிட் செய்யும் எண்ணம்.  அம்மா பற்றிய பரமக்குடி நினைவுகளை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருக்கிறேன். இதுவரை 26 பக்கங்கள் வந்திருக்கின்றன. இதன்பிறகு சென்னை மற்றும் குப்பம் நினைவுகள் இடையிடையே அவளின் திருமணத்த...