பவபூதியும் இரா முருகனும்
தீ நம் ஸ்ரீ கண்டய்யா என்ற பேராசிரியர் கன்னட மொழியில் பாரதிய காவிய மீமாம்சே ( இந்தியக் கவிதையியல்) என்ற நூல் இயற்றியிருக்கிறார். இந்த நூல் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது பவபூதி பற்றி மட்டும். அதிலும் அவர் எழுதிய ஒரேயொரு கவிதை பற்றி மட்டும். உத்தர ராம சரிதத்திலிருந்து இந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யா அவர்களால் தரப்படுகிறது. சீதையை ஐயுற்றுக் காட்டுக்கு அனுப்பி விட்டு நெடுங்காலம் கழித்து இராமன் காட்டுக்கு வருகிறான். இராமனும் சீதையும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்திருந்த வாசந்தி என்ற வனதேவதை காட்டில் இராமனைப் பார்த்து கோபத்தில் இப்படிச் சொல்கிறாள். நீயே உயிர், இன்னொரு இதயம், கண்களுக்கு வெண்ணிலவு, உடலின் அமுதம்! என்று பேசி மேலும் சொல்லி என்? என்றபடி வாஸந்தி மயங்கி விழுந்துவிடுகிறாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தமசா என்ற நதி தேவதை இராமனை வாசந்தி பார்த்ததும் ,கேட்டதும் மயங்கிவிழுந்ததும்கூட சரியான தருணத்தில் நிகழ்ந்ததல்லவா என்கிறாள். வாசந்தி மயங்கி விழு...