Posts

Showing posts with the label நாவல்

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன். 

நேற்று கிடைத்த அரு மணி

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை. குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம்  வாசகி பற்றி  ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது?  அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி  கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா‌. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது.  காவியம்  நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்ப...

மண் மடிப்புகளுக்கு இடையே

பென்யமின் மலையாளத்தில் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவல் தமிழில் எஸ். ராமன் என்பவரால்  மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது.   ஆடு ஜீவிதம் நாம் கற்பனையும் செய்திருக்காத பாலைவன வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.  ஒரு தமிழ் மாணவனாக நான் அறிந்ததெல்லாம் பாலை நிலம் மட்டும்தான்.  நமக்கு பாலை என்பது வறண்ட மலையும் காடும் தான். உண்மையில் பாலைவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பெரும்பாலும் இல்லை , எனலாம்.  பாலை குறித்த விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவவரி என்ற பெயரில் பாலை நில வாழ்க்கையை முன் வைக்கிறது. வெண்முரசில் பாலை குறித்து விரிவாக வாசித்ததுண்டு. எழுத்தாளர் செல்வேந்திரன் பாலை நிலப் பயணம் என்று ஒரு பயண நூல் எழுதி இருக்கிறார். பாலை நிலம்/வனம் குறித்த என் வாசிப்பு இவ்வளவு தான்  இந்த வரிசையில் ஆடு ஜீவிதம் குறித்த மதிப்பீடு இது. பாலைவனம் குறித்த மிக விரிவான சித்திரத்தை வழங்கும் நாவல்  ஆடு ஜீவிதம்  அரேபியாவில் ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை என்று சொல்லி நசீபு அழைத்துச் செல்லப்படுகிறான். தான் துபாய...

நட்சத்திரங்களில் நடப்பவர்கள்

பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வுக்கும் உரியவை என்று சொல்லப்படுவதுண்டு  ஆனால் தூக்கம் வராத பொழுதுகளில் ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்ப்பவர்களுக்கு இன்னொரு உலகம் திறந்து கொள்வதுண்டு. பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள், நோயாளிகள் மட்டுமல்ல மின்னும் நட்சத்திரங்கள், ரகசிய வாசனைகள் என்று இரவு தனக்குரிய மர்மங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறது.  ஜெயமோகனின் இரவு நாவலின் சில அத்தியாயங்களை அவருடைய இணையதளத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அண்மையில் வந்த ஒரு வாசகர் கடிதம் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது.  சரவணன் என்ற ஆடிட்டர் கேரளத்தில் எர்ணாகுளம் அருகே ஓய்வுக்கு சென்றபோது இரவில் மட்டுமே வாழும் மனிதர்களை  தற்செயலாகச் சந்திக்கிறான். நீலிமாவை சரவணன் சந்திப்பதும் , இரவில் விழிப்பு பகலில் உறக்கம் என்று வாழக்கூடிய , அவளைத் திருமணம் செய்து கொள்வதும் கமலா என்ற பெண்ணின் கொலையும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியது போன்று காட்சியளிக்கும் சில வரிகள். ஆனால் அது கதையைப் புரிந்து க...

விண்ணில் விரியும் சிறகுகள்

கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது  நம் கற்பனையால் விரிகிறது.  உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம்.   காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள் ‌ நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப்  பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள்.  காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு  உயிரல்ல, வெறும் அணிகலன்கள்  . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும்  கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம்.  புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன்,  பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும்  கிழவர், அவ்வப்போது  வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள்  என்று தொடரும் ந...

கயிற்றில் நடக்கும் கலை

Image
எழுத்தாளர் பா .ராகவனின் 'ரெண்டு' என்ற நாவல். சற்றே கால் இடறினாலும் கயிற்றிலிருந்து கீழே விழும் ஆபத்தான பயணம் தான். அவந்திகா என்ற பிராமணப் பெண் மனோஜ் ,விக்டர் என்ற இருவர் மீதும் காதல் கொள்கிறாள். இருவருடனும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறாள். தொடர்ந்து என்ன நிகழ்கிறது என்பதே கதை.  பேராசிரியர்களாகப் பணியாற்றும், தங்களின் அறிவையும் ஆளுமையையும் அதிக அளவு நம்பிச் செயல்படும் மூன்று பேரின் வாழ்க்கை நிகழ்வுகள் நாவலாக புனையப்பட்டிருக்கின்றன.  திருவானைக்கோயில்  பற்றி எழுதும் போதும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளைப் பற்றி விவரிக்கும்போதும் பா.ராவின் எழுத்து சிறப்பாகவே வந்திருக்கிறது. பெருநகரங்களுக்கு பக்கத்திலிருக்கும் சிறு பகுதிகள் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுவதுபோல அவந்திகா தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறாள் என்றும் நாம் நாவலை  வாசிக்கலாம்.  வெளிநாட்டுப் பயணத்திலிருக்கும் அவந்திகாவின் விமானம் கடத்தப்படுகிறது. தனது கடந்த கால வாழ்க்கை பற்றிய அவளது நினைவுகளே இந்த நாவவ்.  அவந்திகா, அரசு ஊழியரான அவளுடைய அப்பா, ஆச்சாரமான தாத்தா, பொதுவாக சிற...

எனக்குக் கிடைத்த இரு புதையல்கள்

Image
காண்டேகரின் யயாதி பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எழுத்தாளர் ஜெயமோகனின் கண்ணீரைப் பின் தொடர்தல் தொகுப்பிலும் யயாதி பற்றி ஒரு விரிவான கட்டுரை உள்ளது.   தர்மபுரி கல்லூரியின் மாண்பமை முதல்வர் பேராசிரியர் கோ . கண்ணன் ஒரு மிகச் சிறந்த இலக்கிய வாசகர். பார்வையற்றவர்களுள் நவீன இலக்கிய அறிமுகமும் ஈடுபாடும் கொண்ட சிலருள் ஒருவர். அவரும் கூட யயாதி நாவல் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் யயாதி என்ற ஒரு சிறு நூல் கிடைத்தது. ஆனால் அது காண்டேகரின் நாவல் அல்ல.   ‌  இந்தியாவின்  சிறந்த  நாவல்  ஒன்றை படிக்கும் வாய்ப்பிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.   இதற்கிடையே  யயாதி நாவல் பற்றி வாசகர் மணிமாறன் எழுதிய கடிதத்தை ஜெ தளத்தில்  வாசித்தபோது நாவலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் அதிகரித்தது. தற்செயலாக கிண்டிலில்  தேடிப் பார்த்தேன். இரண்டு தொகுதிகளும் இருந்தன. உடனே வாங்கி விட்டேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தொழில்நுட்பம் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு வர...