Posts

Showing posts with the label இந்தியக் கவிதையியல்

பவபூதியும் இரா முருகனும்

தீ நம் ஸ்ரீ கண்டய்யா என்ற பேராசிரியர் கன்னட மொழியில் பாரதிய காவிய மீமாம்சே  ( இந்தியக் கவிதையியல்) என்ற நூல் இயற்றியிருக்கிறார். இந்த நூல் பற்றி  விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது பவபூதி பற்றி மட்டும். அதிலும் அவர் எழுதிய ஒரேயொரு கவிதை பற்றி மட்டும்.  உத்தர ராம சரிதத்திலிருந்து இந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் ஸ்ரீ கண்டய்யா அவர்களால் தரப்படுகிறது.  சீதையை ஐயுற்றுக் காட்டுக்கு அனுப்பி விட்டு நெடுங்காலம் கழித்து இராமன் காட்டுக்கு வருகிறான்.  இராமனும் சீதையும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதை அறிந்திருந்த வாசந்தி என்ற வனதேவதை காட்டில் இராமனைப் பார்த்து  கோபத்தில் இப்படிச் சொல்கிறாள்.   நீயே உயிர்,  இன்னொரு இதயம்,  கண்களுக்கு வெண்ணிலவு, உடலின் அமுதம்!  என்று பேசி மேலும் சொல்லி என்?  என்றபடி வாஸந்தி மயங்கி விழுந்துவிடுகிறாள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த தமசா என்ற நதி தேவதை இராமனை வாசந்தி பார்த்ததும் ,கேட்டதும் மயங்கிவிழுந்ததும்கூட  சரியான தருணத்தில் நிகழ்ந்ததல்லவா என்கிறாள்.  வாசந்தி மயங்கி விழு...

இந்திய எழிற்கலை நூல் அறிமுகம்

சென்னைப் பல்கலைக்கழக பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக  தத்துவத்துறை சார்பில் இந்திய எழிற்கலை என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தத்துவத் துறைக்கு டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி  மையம் என்று  பெயர்.  பேராசிரியர் பெ திருஞானசம்பந்தன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஐந்து  உரைகளின்  எழுத்து  வடிவம் இந்த நூல். இந்தியக் கவிதையியல் குறித்து தமிழில் நூல்கள் இல்லை  என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோது இந்த நூல் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது.   நூலாசிரியருக்கு தருமபுர ஆதீனம் மும்மொழிக் கொண்டல் என்ற விருதை வழங்கியுள்ளது. நூலில் இடம் பெற்றிருக்கும் ஆங்கிலம், தமிழ் வடமொழி மேற்கோள்களிலிருந்து இத்தகைய ஒரு விருதுக்கு இவர் தகுதியுடையவர் என்றுதான்  தோன்றுகிறது.  நூலின் தொடக்கப்பகுதி கலையும்எழிலும் என்பதாகும்.   ஐந்து உரைகளுள் முதலாவது என்பதால் கலை பற்றிய பொதுவான அறிமுகமாக இந்தக் கட்டுரையைக் கொள்ளலாம்.  நடை,,குணம் முதலிய கவிதைக் கொள்கைகள் பற்றி இரண்டாவது இயல் விரிவாக விளக்குகிறது. சுவைக் கொள்கை பற்...