அகராதி பிடிப்பவன்
சந்தேகம் வரும்போது அகராதியைப் பார்க்கலாம் அகராதியை மொத்தமாக படிப்பவர்களை பார்த்ததுண்டா? இந்தியக்கவிதையியல் தொடர்பான தேடலின் விளைவாக பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ் தொகுத்த பாரதிய காவ்ய சாத்ர பரிபாஷே என்னும் அகராதி கிடைத்தது கர்நாடக சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ் இந்த அகராதியைத் தொகுத்துள்ளார். ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் முதலில் பணியாற்றியவர். வடமொழியில் உள்ள கவிதையியல் சார்ந்த சொற்களை தொகுத்து விளக்கும் அகராதி இது. ஒவ்வொரு கலைச் சொல்லையும் வரையறுத்து அதன் வரலாற்றை தொகுத்துரைத்து அது தொடர்பாக வாசிக்க வேண்டிய நூற்பகுதியையும் விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சான்றாக உன்மத்தம் என்ற ஓர் உணர்வு பற்றிப் பார்ப்போம். பரதர் தமது நூலில் 33 மாறும் உணர்வுகளுள் ஒன்றாக இதனைக் கருதுகிறார். மது அருந்துவதால் ஏற்படும் உணர்வு உன் மத்தம் எனப்படுகிறது. இந்த மதமதப்பு தற்காலிகமானது. எனவே தான் இது சஞ்சாரி பாவம், அல்லது வ்யபாசாரி பாவம்...