Posts

Showing posts with the label வாழ்த்து

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது

2025 ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட இருக்கிறது. ரமேஷ் பிரேதன் எழுதிய ஐந்தவித்தான் என்ற ஒரே ஒரு நாவலை மட்டும் படித்திருக்கிறேன். இரு பகுதிகளாக அமைந்த அந்த நாவல் முதல் பகுதி நேர்கோட்டு நிலையிலும் இரண்டாம் பகுதி அல் நேர்கோட்டு நிலையிலும் அமைந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவருடைய மற்ற படைப்புகளை முடிந்தவரை படிக்க வேண்டும்.   டிசம்பருக்குக் காத்திருக்கிறேன்! 

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்!  விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின்  வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள்.  . அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்..  நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது.  இதற்காக அவர் செலவிடும்  நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன்....

நான் உரையாற்றுகிறேன்

கம்பராமாயணக் கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் வாசிப்பு நிறைவடைந்து விட்டது.  காண்டத்தின் சாரத்தைத் தொகுத்துக் கொள்ளும் நோக்கில் இன்றுமுதல் உரைகள் தொடங்குகின்றன. பிணி வீட்டுப் படலம் குறித்து நான்  வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றுகிறேன்   படலத்தை சுருக்கிச் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அனுமன் இராவணனுக்குச் சொல்லும் அறிவுரைகளை நன்கு விளங்கிக் கொள்ள காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மற்ற அறிவுரைப் பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று நண்பர் ஸ்ரீனிவாஸ் சொல்லிவிட்டார்.  எனவே அவற்றையும் படித்துக்கொண்டு  வருகிறேன்.  இந்த வாத்தியார்  ஸ்ரீநிவாஸ் நிறைய நிறைய வீட்டுப்பாடம்  கொடுக்கிறார்! வாழ்க !  உரை எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும்.  வெள்ளிக்கிழமை சந்திப்போம்! நண்பர்களின் உரைகள் யாவும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 

வாழ்த்துக்கள்

பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கிறார். இலக்கியத் திறனாய்வு, ஆய்வு, தொகுப்பு என பல நிலைகளில் பங்களித்து வருகிறார்.  பேராசிரியர்  வீ. அரசு அவர்களின் மாணவர்.  அண்மையில் சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள தமிழில் தலித்தியம் என்ற நூலுக்கு பேராசிரியர் க.  பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்பெறும் பஞ்சு  பரிசில் 2023 வழங்கப்படுகிறது.  பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களினைச் சிறப்பிக்கும் வண்ணம்  நடைபெறும் பஞ்சு  75  விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.  பிப்ரவரி  நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  சென்னை ரோஜா முத்தையா நினைவு நூலக வளாகத்தில்  விழா நடைபெறுகிறது. நண்பர்  இன்னும் நிறைய நிறைய அங்கீகாரங்களைப் பெறவேண்டும்.  வாழ்த்துக்கள் இரமேஷ்! 

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு

நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பொருளை க மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள அத்தங்கி மலை சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.  நண்பருடன் சென்னை வருகிறேன். .  நாளை ஜனவரி 7 . 12 மணி அளவில் புத்தக வெளியீடு நடைபெறுகிறது.  எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் அவர்களும் பங்கேற்கிறார். நிகழ்ச்சி எதிர் வெளியீடு அரங்கு F 61 ல் நடைபெறும்   நண்பருடன் நானும் வருகிறேன். நீங்களும் வருவீர்கள் தானே! 

484 ாழ்த்துக்கள் பத்மநாபன்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு  விருப்பம் அதிகம். ஒரு நாட்குறிப்பில் வேலைகளை எழுதி வைத்து அவற்றை செய்து முடித்தவுடன் டிக் செய்து கொள்வது, ஒவ்வொரு வாரமும் மொத்தமாக கணக்கிட்டு செய்து முடித்த வேலைகளுக்கு ஏற்ப எனக்கு நானே மதிப்பெண் வழங்கிக் கொள்வது எல்லாம் நினைவிருக்கிறது. அக்கா அதனை எடுத்து எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மதிப்பெண்களுக்காக என்னை கேலி செய்ததுண்டு. அக்கா அல்ல இன்னொரு அம்மா என்று அவளை நான் உணரத் தொடங்கி இருந்தபோது நான்  சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வதில் விருப்பம் கொண்ட எனக்கு எழுதுவது மட்டும் கை கூடவே இல்லை. ஒரு மகனாக, அப்பாவாக, ஆசிரியராக மகிழ்வு கொள்ளும் என்னால் என்னுடைய எழுத்துப் பங்களிப்புகள் பற்றி மட்டும் சொல்லிக் கொள்வதில் தயக்கமும் பதற்றமும் உண்டு.  2023 ஜனவரியின் தொடக்க நாட்கள் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் முன்னெடுக்க ஆயிரம் மணி நேர வாசிப்பு பணியில் நண்பர்கள் ஈடுபடத்தொடங்கினார்கள். கதிரவன் என்னை அழைத்து வாசிப்பு சவாலில் பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்ட...

பனிமலர் வாழ்க!

இன்று  எங்கள் புதன் வட்ட நிகழ்வில் வ பனிமலர் துப்பட்டா போடுங்கள் தோழி என்ற கீதா இளங்கோவனின் நூலை அறிமுகப்படுத்தினார்.  மலர் நமது தமிழ்த்துறையின் ஆய்வு மாணவி. நூல் குறித்த தமது கருத்துக்களை பனிமலர் எழுதி வந்திருந்தமை சிறப்பு‌ . பெண்ணியம் குறித்து தீவிரமான உரையாடல்கள் நடைபெற்றன. அண்மையில் விவாதப்  பொருளான ஒருபால் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நானும் நிகழ்வில் பங்கேற்றேன். நண்பர் விஷ்ணு குமரனும் சில கருத்துக்களை தீவிரமாக முன் வைத்தார்.பனிமலர் மேலும் மேலும் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். மகள் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பனிமலரின் அப்பாவுக்கு என் அன்பு. பனிமலர் வாழ்க.! 

அறிவுவானில் ஓர் அழகிய குருகு

நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழ்களில் குருகு இணைய இதழும் ஒன்று. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குருகு இணைய இதழில் இரண்டு முக்கியமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதியுள்ள  மனம் குறித்த கட்டுரையை திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே குரு நித்ய சைதன்ய யதி  கட்டுரையை இந்திய உளவியல் என்ற பெயரில்  நண்பர் அழகிய மணவாளன் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.  தொடங்கிய நாள் முதல் குருகு இதழ் மிகத் தீவிரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கலை, தத்துவம் உள்ளிட்டத் துறைகளில் வெளிவரும் குருகு இதழின்  கட்டுரைகள் நமது ஆய்வுகளிலும் சிந்தனைகளிலும் பல புதிய திறப்புகள் ஏற்பட நிச்சயம் வழிவகுக்கும். இன்னும் பத்து வருடங்களில் இதழின் பங்களிப்பு தமிழின் அறிவுச் சமூகத்தால்  அங்கிகரிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். ஆசிரியர்க் குழுவில் இடம்பெற்றுள்ள  நண்பர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவேன். காலனீயத்தின் வடுவாக அறிவுலகில் ஒட்டியிருக்கும்  ஐரோப்பிய மைய நோக்கை மெல்லமெல்ல அகற்ற முயல்கிறீர்கள். மகத்தான பணி! .  இதழ் ...

யமுனாவின் பொற்கணங்கள்

நமது பல்கலைக்கழக தமிழ்த்துறை  சார்பில் ஒவ்வொரு வாரமும்  புதன் கிழமையன்று வாராந்தரக் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பேராசிரியர் தமிழவன் அவர்களின் கனவு.  தொடக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடத்திவந்தோம். புதன்கிழமை வசதிப் பட்டதால் மாற்றிவிட்டோம். ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் எல்லோரும் கலந்துகொள்கிறோம். இதனை புதன் வட்டம் என்று அழைக்கிறோம். பேராசிரியர் தமிழவன் காலத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களின் மதியவேளைகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெற்று வந்தது.  புதன் வட்டத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம், ஆய்வுக் கட்டுரைகளும் வாசிப்போம்.   தற்போது எங்களின்  புனைவுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.  முற்றிலும் மாணவர்களே பொறுப்பேற்று நடத்துகிறார்கள். இந்தப் பயிற்சியின் விளைவாக மாணவர்களின் மேடை வெளிப்பாடுகள் மேம்படுவதைக் காணமுடிகிறது.  அக்டோபர் 18 புதன்கிழமையன்று எங்கள் மாணவி யமுனா பொ. வேல்சாமி எழுதிய "பொற்காலங்களும் இருண்ட காலங்களும் "என்ற கட்டுரைத் தொகுப்பை அறி...

எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! . 

இவருக்கு எத்தனை கரங்கள்?

நண்பர் பொருநை க .மாரியப்பனுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு அதிகரித்தது. மகாவித்வான் என்ற அவருடைய முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.   அதன் பிறகு படிக்கட்டுகளில் பாய்ந்து ஏறுகிறார்.  தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் சிறுகதைகளை அத்தங்கிமலை என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. இந்தத் தொகுப்புக்கு அருட் செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மகாத்மா பிறந்த நாள் . சென்னையில் நண்பருக்கு பரிசு வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை முடித்து தமிழின் முதன்மையான பதிப்பகம்  ஒன்றின் மூலம் வெளியிடயிருக்கிறார். இன்னொரு மொழிபெயர்ப்பு நாவல் பாதி நிறைவடைந்த நிலையில் இருக்கிறது. சாகித்ய அகாடமிக்காக மற்றொரு   மொழிபெயர்ப்பு சிறுகதைத்  தொகுப்பு வெளிவரவிருக்கிறது. மதுராந்தகம் நரேந்திரா எழுதிய புகழ்பெற்ற நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு முயற்சி வேறொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோக பேராசிரியர் பி .திருப்பதி ராவ் எழுதிய நூல் ஒன்றை தமிழ்ப்படுத்தும் முயற்சி.  (கொஞ்ச...

எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?    டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.  2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான்.  அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழு...

விரல் மொழியருக்கு வாழ்த்துக்கள்

லூயி பிரெய்ல் பார்வையற்றவர்கள் தொட்டு உணரும் புள்ளி எழுத்து வடிவங்களை உருவாக்கினார்.. அதனால்தான் அந்த எழுத்து வடிவங்கள் அவற்றை உருவாக்கிய லூயிப் ப்ரெய்ல்  பெயரிலேயே ப்ரெய்ல் எழுத்துக்கள் என்று இன்றளவும் குறிக்கப்படுகின்றன.  . 6 புள்ளிகளைக் கொண்டு 63 வேறுபட்ட வடிவங்களை உருவாக்க முடியும். அந்த வடிவங்களை இணைத்து எழுத்துகளாக பயன்படுத்த முடியும். உலகின் எந்த மொழியையும்  ப்ரெய்ல் வாயிலாக எழுத முடியும். ப்ரெய்ல் எழுத்துக்களை புள்ளி எழுத்துகள், குமிழி எழுத்துக்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. எழுத்துகளை விரல்களால் தொட்டு உணர முடியும் என்பதால் பிரெய்ல் எழுத்துக்களை விரல் மொழி என்றும் கூடச் சொல்லலாம்.  . நண்பர்கள் சக்திவேல்,  பாலகணேஷ் விரல் மொழியர் என்ற இணைய இதழை வெகு நாட்களாக நடத்தி வருகிறார்கள்.  நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். மனோகர் என்ற இன்னொரு நண்பரும் புத்தகப் புதையல், புத்தகப் பூங்கா என்ற வெவ்வேறு புலனக் குழுக்கள்  வாயிலாக பார்வையற்றவர்களிடையே வாசிப்புச்  செயல்பாட்டை ஊக்குவிக்கிறார். இப்போது இவர்கள்  மூன்று பேரும் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக...

வாழ்த்துகள்

இன்று  ஆகஸ்ட் 2ம்தேதி பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற வாராந்தர ஆய்வறங்கில் நண்பர்பொருநை  க. மாரியப்பன் தாம் மொழிபெயத்த கருமிளகுக்கொடி என்ற நாவல் குறித்து உறையாற்றினார்.  இந்த நாவல் வி சந்திரசேகர ராவ் அவர்களால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது.  மொழிபெயர்ப்பின்போது எந்தெந்த அம்சங்கள் எவ்வெவ்வாறு பிரிதொரு மொழியில் பகிரப்படுகின்றன என்பவை குறித்த  நண்பர் க. . மாரியப்பன்   அவர்களின் உரை சிறப்பாக இருந்தது. நண்பருக்கு வாழ்த்துகள்!