அறிவுவானில் ஓர் அழகிய குருகு

நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழ்களில் குருகு இணைய இதழும் ஒன்று. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குருகு இணைய இதழில் இரண்டு முக்கியமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதியுள்ள  மனம் குறித்த கட்டுரையை திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே குரு நித்ய சைதன்ய யதி  கட்டுரையை இந்திய உளவியல் என்ற பெயரில்  நண்பர் அழகிய மணவாளன் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். 
தொடங்கிய நாள் முதல் குருகு இதழ் மிகத் தீவிரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கலை, தத்துவம் உள்ளிட்டத் துறைகளில் வெளிவரும் குருகு இதழின்  கட்டுரைகள் நமது ஆய்வுகளிலும் சிந்தனைகளிலும் பல புதிய திறப்புகள் ஏற்பட நிச்சயம் வழிவகுக்கும். இன்னும் பத்து வருடங்களில் இதழின் பங்களிப்பு தமிழின் அறிவுச் சமூகத்தால்  அங்கிகரிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். ஆசிரியர்க் குழுவில் இடம்பெற்றுள்ள  நண்பர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவேன். காலனீயத்தின் வடுவாக அறிவுலகில் ஒட்டியிருக்கும்  ஐரோப்பிய மைய நோக்கை மெல்லமெல்ல அகற்ற முயல்கிறீர்கள். மகத்தான பணி! . 
இதழ் மென்மேலும் சிறக்க நாம் எல்லோரும் பங்களிப்போம். நண்பர்களுக்கு வாழ்த்துகள்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்