Posts

Showing posts with the label விரல் மொழியர்

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

இது ஒரு பழைய செய்தி. மிகப் பழைய செய்தி. அப்போதே நான் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் எழுத முடிந்தது. இப்போதாவது எழுத முடிந்ததே என்று நிறைவடைய வேண்டியதுதான்!  விரல் மொழியர் என்னும் பெயரில் பார்வையற்றவர்களின்  வாசிப்புக் குழு ஒன்று புலனத்தில் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் பொன் சக்திவேல், மனோகரன், பாலகணேசன் போன்ற பார்வையற்ற நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டு பார்வையற்றவர்களிடம் வாசிப்புப் பழக்கம் மேம்பட பணியாற்றி வருகிறார்கள்.  . அச்சு நூல்களைப் பார்வையற்றவர்கள் வாசிக்கும் வண்ணம் மின் நூல்களாக மாற்றும் ஒரு பெரிய பணியை நண்பர் சக்திவேல் முன்னெடுக்கிறார்..  நூல்களின் அட்டைகளை கழற்றி விட்டு அவற்றை ஸ்கேன் செய்யும் பணியை அவர் சளைக்காமல் முன்னெடுக்கிறார். ஒரு நூலை இவ்வாறு செய்யலாம். சில நூல்களையும் செய்து விடலாம். நூற்றுக்கணக்கான நூல்களை பொறுமையாக ஸ்கேன் செய்ய குறையாத ஈடுபாடு வேண்டும். நண்பர் சக்திவேலுக்கு அது நிறைய நிறைய இருக்கிறது.  இதற்காக அவர் செலவிடும்  நேரமும் உழைப்பும் மகத்தானவை. நானும் விரல் மொழியர் வாசிப்புக் குழுவில் இருக்கிறேன்....

விரல் மொழியருக்கு வாழ்த்துக்கள்

லூயி பிரெய்ல் பார்வையற்றவர்கள் தொட்டு உணரும் புள்ளி எழுத்து வடிவங்களை உருவாக்கினார்.. அதனால்தான் அந்த எழுத்து வடிவங்கள் அவற்றை உருவாக்கிய லூயிப் ப்ரெய்ல்  பெயரிலேயே ப்ரெய்ல் எழுத்துக்கள் என்று இன்றளவும் குறிக்கப்படுகின்றன.  . 6 புள்ளிகளைக் கொண்டு 63 வேறுபட்ட வடிவங்களை உருவாக்க முடியும். அந்த வடிவங்களை இணைத்து எழுத்துகளாக பயன்படுத்த முடியும். உலகின் எந்த மொழியையும்  ப்ரெய்ல் வாயிலாக எழுத முடியும். ப்ரெய்ல் எழுத்துக்களை புள்ளி எழுத்துகள், குமிழி எழுத்துக்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. எழுத்துகளை விரல்களால் தொட்டு உணர முடியும் என்பதால் பிரெய்ல் எழுத்துக்களை விரல் மொழி என்றும் கூடச் சொல்லலாம்.  . நண்பர்கள் சக்திவேல்,  பாலகணேஷ் விரல் மொழியர் என்ற இணைய இதழை வெகு நாட்களாக நடத்தி வருகிறார்கள்.  நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். மனோகர் என்ற இன்னொரு நண்பரும் புத்தகப் புதையல், புத்தகப் பூங்கா என்ற வெவ்வேறு புலனக் குழுக்கள்  வாயிலாக பார்வையற்றவர்களிடையே வாசிப்புச்  செயல்பாட்டை ஊக்குவிக்கிறார். இப்போது இவர்கள்  மூன்று பேரும் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக...