ஒரு பேரலை
2024 விஷ்ணுபுரம் விழாவிற்காக சில மாதங்களாகவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பல நூல்கள் விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் முன்பு தான் கிடைத்தன. எப்படியோ கையில் இருந்த நூல்களை எல்லாம் படித்து விட்டேன் அவ்வாறு படித்துவிட்டு விழாவிற்கு சென்றது நிறைவாக இருந்தது. டிசம்பர் 16 முதல் 20 வரை படித்த நூல்கள் துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிராஜா 100 ரூபில்கள் மயிலன் ஜி சின்னப்பன் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி சின்னப்பன் மண்டோவின் காதலிகள் லாவண்யா சுந்தர்ராஜன் ஆரண்யம் கயல் ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கயல் பொற்பனையான் சித்திரன் ஒரு பேரலையில் சறுக்கி விளையாடக் கிடைத்த ஒரு வாரம்.