பத்தும் ஐந்தும் ஒரு பகலன்றோ!
நண்பர் பசவராஜ ஐயப்ப கோடகுண்டி குல்பர்கா மத்தியப்பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2005ம் ஆண்டு நான் திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணிக்குச்சேர்ந்தபோது நண்பர் கன்னடத்துறையில் பணிக்குச் சேர்ந்திருந்தார். பிறகு கர்நாடக மாநிலத்தில்லுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பசவராஜ் அடிப்படையில் ஒரு மொழியியல் ஆய்வாளர். ஆனால் அவரை அப்படி ஒரு துறையுடன் வரையறுத்து நிறுத்துவதும் கடினம். அண்மையில் அக்கமகாதேவி குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார். ராமச்சந்திர பேந்தரே பற்றியும் இன்னொரு புத்தகம். நீங்களே சொல்லுங்கள்? இப்படிப்பட்டவர்களை ஒரு துறையுடன் எப்படிப் பொருத்துவது? திராவிடப் பல்கலைக்கழக கன்னடத்துறையின் பாடத்திட்ட வரையறைக் குழு கூட்டம் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க பசவராஜ் வந்திருந்தார். கூட்டம் முடித்து இரவு நமது வீட்டில் சாப்பிட்டார். கன்னடத் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்க அடிப்படைப் பணிகளை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டுச் செய்தது பற்ற...