Posts

Showing posts with the label அருஞ்சொல்

இப்படி செய்திருக்க வேண்டாமே சமஸ்

அருஞ்சொல் இதழ் இனிமேல் வெளிவராது என்று அதன் நிறுவனர் சமஸ் கூறிவிட்டார். ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரை என்று அருஞ்சொல் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது நான் பெரும்பாலும் அந்த கட்டுரையை கவனிப்பதுண்டு. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதும் பொருளியல் சார்ந்த கட்டுரைகள், யோகேந்திர யாதவ், ராமச்சந்திர குகா ஆகியோரின் அரசியல் கட்டுரைகள் இவற்றை தவறவிடுவதில்லை.  அருஞ்சொல்லுக்கு தெளிவான ஒரு அரசியல் இருந்தது. அது வலதுசாரிஅ ரசியலுக்கு எதிரான ஒன்று என்பதாக வகுத்துக் கொள்கிறேன்.  மோதி தலைமையிலான அரசு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் சொன்னபோது  அடித்துச் சொல்கிறேன், பா. ஜ. க 300 இடங்கள் ஜெயிக்காது என்று சமஸ் எழுதினார். அவரின் சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது ஒரு ஆறுதலாக இருந்தது.  அதற்காக காங்கிரஸ் மீது அருஞ்சொல். விமர்சனங்களை வைக்காமலும் இல்லை. அண்மையில் நடந்த ஹரியானா தேர்தலை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை என்ற கட்டுரையை சான்றாக சொல்லலாம்.  மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறை நிறுவனத்தில் தாம் ஏற்றுக் கொண்ட பொறுப்பு காரணமாக அருஞ்சொல் ஆச...

எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! .