Posts

Showing posts with the label புத்தகக் கண்காட்சி

எமது இல்லத்துக்கு வருக!

சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச்  சென்ற நினைவு. ஒவ்வொரு வருடம் கண்காட்சியில் நான் வாங்கியிருக்கும் நூல்களின் அடிப்படையில் அப்போதைய என் மனநிலையை புரிந்து கொள்ள முடியும். முதன் முதலில் கண்காட்சிக்குச் சென்றபோது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சிறு துண்டுப் பிரசுரங்கள்  மற்றும் குறுநூல்களை அதிகம் வாங்கினேன்.  சில புத்தகங்களின் பெயர்களைச்  சொல்கிறேன். வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக்குழுக்கள் , மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை எவ்வாறு பயில்வது?  இப்படிப்பட்டவை.  அடுத்த வருடமே சக்கரம் சுழன்றுவிட்டது. உங்களுக்குள் இருக்கும் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி? உபநிஷதங்களின் சாரம் முதலிய  புத்தகங்கள்  பக்கம் என் கவனம் சென்றது.  நண்பர்களுடன் சேர்ந்து செல்வது வழக்கம். வீட்டிலிருந்தே புளி சாதம் தயிர் சாதம் கட்டிக்கொண்டு சென்று, புல் வெளியில் உட்கார்ந்து மதியம் சாப்பிடுவோம்.  அப்போதெல்லாம் சில சுற்றுகளில் ஒட்டுமொத்த கண்காட்சியையே பார்த்த...