Posts

Showing posts with the label நூல் அறிமுகம்

மண் மடிப்புகளுக்கு இடையே

பென்யமின் மலையாளத்தில் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவல் தமிழில் எஸ். ராமன் என்பவரால்  மொழிபெயர்க்கப்பட்டு உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது.   ஆடு ஜீவிதம் நாம் கற்பனையும் செய்திருக்காத பாலைவன வாழ்க்கையை விவரிக்கும் நாவல்.  ஒரு தமிழ் மாணவனாக நான் அறிந்ததெல்லாம் பாலை நிலம் மட்டும்தான்.  நமக்கு பாலை என்பது வறண்ட மலையும் காடும் தான். உண்மையில் பாலைவனம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே பெரும்பாலும் இல்லை , எனலாம்.  பாலை குறித்த விரிவான பதிவுகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சிலப்பதிகாரம் வேட்டுவவரி என்ற பெயரில் பாலை நில வாழ்க்கையை முன் வைக்கிறது. வெண்முரசில் பாலை குறித்து விரிவாக வாசித்ததுண்டு. எழுத்தாளர் செல்வேந்திரன் பாலை நிலப் பயணம் என்று ஒரு பயண நூல் எழுதி இருக்கிறார். பாலை நிலம்/வனம் குறித்த என் வாசிப்பு இவ்வளவு தான்  இந்த வரிசையில் ஆடு ஜீவிதம் குறித்த மதிப்பீடு இது. பாலைவனம் குறித்த மிக விரிவான சித்திரத்தை வழங்கும் நாவல்  ஆடு ஜீவிதம்  அரேபியாவில் ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை என்று சொல்லி நசீபு அழைத்துச் செல்லப்படுகிறான். தான் துபாய...

விண்ணில் விரியும் சிறகுகள்

கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது  நம் கற்பனையால் விரிகிறது.  உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம்.   காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள் ‌ நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப்  பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள்.  காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு  உயிரல்ல, வெறும் அணிகலன்கள்  . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும்  கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம்.  புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன்,  பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும்  கிழவர், அவ்வப்போது  வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள்  என்று தொடரும் ந...

அகராதி பிடிப்பவன்

சந்தேகம் வரும்போது அகராதியைப் பார்க்கலாம் அகராதியை மொத்தமாக படிப்பவர்களை பார்த்ததுண்டா?  இந்தியக்கவிதையியல் தொடர்பான தேடலின் விளைவாக பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ்  தொகுத்த பாரதிய காவ்ய சாத்ர பரிபாஷே என்னும் அகராதி கிடைத்தது கர்நாடக சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ் இந்த அகராதியைத்  தொகுத்துள்ளார்.  ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் முதலில்  பணியாற்றியவர்.   வடமொழியில் உள்ள கவிதையியல் சார்ந்த சொற்களை தொகுத்து விளக்கும் அகராதி இது.  ஒவ்வொரு கலைச் சொல்லையும் வரையறுத்து அதன் வரலாற்றை தொகுத்துரைத்து அது தொடர்பாக வாசிக்க வேண்டிய நூற்பகுதியையும் விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சான்றாக உன்மத்தம் என்ற ஓர் உணர்வு பற்றிப் பார்ப்போம்.  பரதர் தமது  நூலில் 33 மாறும் உணர்வுகளுள் ஒன்றாக  இதனைக் கருதுகிறார்.   மது அருந்துவதால் ஏற்படும் உணர்வு உன் மத்தம் எனப்படுகிறது. இந்த  மதமதப்பு தற்காலிகமானது. எனவே தான் இது சஞ்சாரி பாவம், அல்லது வ்யபாசாரி பாவம்...