நட்சத்திரங்களில் நடப்பவர்கள்
பகல் உழைப்புக்கும் இரவு ஓய்வுக்கும் உரியவை என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் தூக்கம் வராத பொழுதுகளில் ஜன்னல்களின் வழியே எட்டிப் பார்ப்பவர்களுக்கு இன்னொரு உலகம் திறந்து கொள்வதுண்டு. பைத்தியக்காரர்கள், குடிகாரர்கள், நோயாளிகள் மட்டுமல்ல மின்னும் நட்சத்திரங்கள், ரகசிய வாசனைகள் என்று இரவு தனக்குரிய மர்மங்களுடன் நமக்காகக் காத்திருக்கிறது. ஜெயமோகனின் இரவு நாவலின் சில அத்தியாயங்களை அவருடைய இணையதளத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அண்மையில் வந்த ஒரு வாசகர் கடிதம் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. சரவணன் என்ற ஆடிட்டர் கேரளத்தில் எர்ணாகுளம் அருகே ஓய்வுக்கு சென்றபோது இரவில் மட்டுமே வாழும் மனிதர்களை தற்செயலாகச் சந்திக்கிறான். நீலிமாவை சரவணன் சந்திப்பதும் , இரவில் விழிப்பு பகலில் உறக்கம் என்று வாழக்கூடிய , அவளைத் திருமணம் செய்து கொள்வதும் கமலா என்ற பெண்ணின் கொலையும் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்பும் கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியது போன்று காட்சியளிக்கும் சில வரிகள். ஆனால் அது கதையைப் புரிந்து க...