Posts

Showing posts with the label கம்பராமாயணம்

என்னுடைய உரை

சுந்தரகாண்டத்தின் பிணிவீட்டுப் படலம் குறித்த என்னுடைய உரை மார்ச் 22   அன்று  கிளப் ஹவுஸ் செயலி வாயிலாக நடைபெற்றது. பிணிவீட்டுப் படலத்தை தொகுத்துரைக்க அதில் இடம்பெற்றுள்ள பல வகை நாடகியத்  தருணங்களை அறிய முடிந்தது.  பிணிவீட்டுப் படலம் என்பதற்கு அரக்கர்கள் அரக்கத் தன்மை என்ற பிணியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்குக் காரணமான படலம், அரக்கர்கள் அரக்கத் தன்மையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபடக் காரணமாக அமையும் படலம், இலங்கையின் கட்டுக்கோப்பு என்ற பிணிப்பு அனுமனால் நிரந்தரமாகக் கலைக்கப்படும் படலம் என்ற வெவ்வேறு விளக்கங்களை நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலின் வழி அடைய முடிந்தது. அனுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகளை காப்பியத்தில் இடம் பெற்றுள்ள வெவ்வேறு அறிவுரைப் பகுதிகளுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடிந்தது. ஒருவருக்கு நாம் அறிவுரை கூறும் போது இருவருக்கும் இடையில் திகழும் உறவு நிலைக்கேற்ப அந்த அறிவுரைகளில் சொற்கள் அமையும். அந்த வகையில் மாறிசன் அறிவுரையில் இரத்த உறவின் விளைவால் தோன்றும் நெருக்கமும்,  அனுமன் அறிவுரையில் சற்று கூடுதல் விலக்கமும், சடாயு உரையில் ...

நான் உரையாற்றுகிறேன்

கம்பராமாயணக் கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் வாசிப்பு நிறைவடைந்து விட்டது.  காண்டத்தின் சாரத்தைத் தொகுத்துக் கொள்ளும் நோக்கில் இன்றுமுதல் உரைகள் தொடங்குகின்றன. பிணி வீட்டுப் படலம் குறித்து நான்  வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றுகிறேன்   படலத்தை சுருக்கிச் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அனுமன் இராவணனுக்குச் சொல்லும் அறிவுரைகளை நன்கு விளங்கிக் கொள்ள காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மற்ற அறிவுரைப் பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று நண்பர் ஸ்ரீனிவாஸ் சொல்லிவிட்டார்.  எனவே அவற்றையும் படித்துக்கொண்டு  வருகிறேன்.  இந்த வாத்தியார்  ஸ்ரீநிவாஸ் நிறைய நிறைய வீட்டுப்பாடம்  கொடுக்கிறார்! வாழ்க !  உரை எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும்.  வெள்ளிக்கிழமை சந்திப்போம்! நண்பர்களின் உரைகள் யாவும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 

இன்றுடன் நிறைவு

நாங்கள் முன்னெடுக்கும் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியான சுந்தரகாண்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி சில நாட்களில் காண்டத்தின் கருத்துகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொள்ளும் உரையாடல்கள் தொடங்கும்.  இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! 

மற்றும் ஒரு மைல்கல்!

இன்று 31 ஜனவரி 2024. கம்பராமாயண கூட்டு வாசிப்பின் 350ஆவது அமர்வு. உண்மையில் கலந்துகொள்வேன் என்று நினைத்திருக்கவில்லை.   எழுத்தாளர் பார்கவி அவர்கள்தான் நினைவுபடுத்தினார். நண்பர்கள் சிறப்பாக  வாசிப்பை நிகழ்த்தினார்கள்.  அடுத்தென்ன? 375.  அப்புறம்?  400!  ஏனென்றால் இது இம்பர் வாரி, வாரி என்பதற்கு முடிவேது!  அனைத்திற்கும் நன்றி நண்பர்களே! 

அருகழைக்கிறது அது

இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்ப் பேரிலக்கியமான கம்பராமாயணத்தின் 5 ஆயிரம்  பாடல்களை இன்றுடன் நிறைவு செய்யவிருக்கிறோம். மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பத்தாயிரம் பாடல்களை நிறைவு செய்யும் நாளும் நெருங்குகிறது, ஆம்!  அதோ அங்கேதான் இருக்கிறது, நம்மை அருகழைக்கிறது அது! 

அடியேனும் வந்து விட்டேன்

நண்பர்கள் நேற்று கடல் தாவு படலம் நிறைவு செய்தார்கள்  பத்து மணிக்கு பிறகும் மூன்று பாடல்கள் எஞ்சியிருந்தன.  இருந்தாலும் முயன்று படலம் நிறைவு செய்யப்பட்டது.  ஒவ்வொரு வாரமும் வாசிக்க வேண்டிய பாடல்களை அந்தந்த வாரத்துக்குள்ளேயே முடித்துவிடும்  வழக்கம் இந்த முறை தவறிவிட்டது. நேற்று அனுமன் இலங்கையை அடைந்த காட்சியை வாசிக்கும் போது நான் அனுமன் மைநாகம் சந்திப்புப் பகுதியிலிருந்தேன். அடுத்து ஊர் காட்சிப்படலம் இது இப்படியே போனால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும்.  இன்று காலை எழுந்ததும் விடுபட்ட பாடல்களை முதலில் வாசித்து விட்டேன்.  ராபர்ட் பாய்ஸ் என்ற பிரிட்டிஷ் உளவியலாளர் எழுத்துப் பழக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளால் அறியப்பட்டவர்.  அறிவும் ஆற்றலும் மிக்க பேராசிரியர்கள் சிலர் ஏன் போதுமான அளவு எழுதுவதில்லை என்ற கேள்வியை அவர் எதிர்கொண்டார் ‌  அவருடைய முடிவு சுவாரஸ்யமானது.  எப்போதாவது எழுதுவேன், நிறையபக்கங்கள்  எழுதுவேன், அதிக நேரம் எழுதுவேன் என்று சொல்பவர்கள் ஒரு தரப்பு.  தினம் தோறும் எழுதுவேன், குறைந்த நேரம் எழுதுவேன், குறைந்த அளவே எழுது...

நான் பேசுகிறேன்

இம்பர்வாரி என்ற பெயரில் கிளப் ஹவுஸ் செயலியில் ஒரு வாசிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. நண்பர்களாகிய நாங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் இரவு   8=30 மணி முதல் 10 மணி வரை கம்பராமாயணம் வாசிக்கிறோம். பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் கடந்து இப்போது கிட்கிந்தா காண்டம் நிறைவு செய்து விட்டோம்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் கு அரசேந்திரன் அவர்களின் திருவடி தொழுது நான் கம்பராமாயணப் பாடல்களைக்  கற்றிருக்கிறேன்.  பத்தாயிரம் பாடல்களை இந்த வாழ்வில் வாசித்து முடிக்க முடியுமா என்ற மலைப்பு எனக்குள் இருந்தது.  ஆனால் அந்தக் கனவுக்கு நண்பர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள். நண்பரxகள் ஸ்ரீனிவாஸ் மற்றும் கமலநாதன் எழுத்தாளர் பார்கவி உள்ளிட்ட குறையாத ஆர்வம் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் இம்பர் வாரியில் உண்டு.  ஆயிரம் பாடல்களை முடித்த பிறகு முற்றோதல் செய்வதும் அவ்வப்போது கலந்துரையாடல்களை அமைத்து பாடல்களின் நுட்பங்களை புரிந்து கொள்வதும் எங்கள் வழக்கம்.   எங்கெங்கோ வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற...