நான் பேசுகிறேன்

இம்பர்வாரி என்ற பெயரில் கிளப் ஹவுஸ் செயலியில் ஒரு வாசிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. நண்பர்களாகிய நாங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் இரவு   8=30 மணி முதல் 10 மணி வரை கம்பராமாயணம் வாசிக்கிறோம். பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம் கடந்து இப்போது கிட்கிந்தா காண்டம் நிறைவு செய்து விட்டோம். 
சென்னைக் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியர் கு அரசேந்திரன் அவர்களின் திருவடி தொழுது நான் கம்பராமாயணப் பாடல்களைக்  கற்றிருக்கிறேன்.  பத்தாயிரம் பாடல்களை இந்த வாழ்வில் வாசித்து முடிக்க முடியுமா என்ற மலைப்பு எனக்குள் இருந்தது. 
ஆனால் அந்தக் கனவுக்கு நண்பர்கள் செயல்வடிவம் கொடுத்தார்கள். நண்பரxகள் ஸ்ரீனிவாஸ் மற்றும் கமலநாதன் எழுத்தாளர் பார்கவி உள்ளிட்ட குறையாத ஆர்வம் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் இம்பர் வாரியில் உண்டு. 
ஆயிரம் பாடல்களை முடித்த பிறகு முற்றோதல் செய்வதும் அவ்வப்போது கலந்துரையாடல்களை அமைத்து பாடல்களின் நுட்பங்களை புரிந்து கொள்வதும் எங்கள் வழக்கம்.  
எங்கெங்கோ வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கம்பனைக்  கற்பதில் காட்டும் அர்ப்பணிப்பு என்னை பணிய வைக்கிறது. 
இம்பர் வாரி கலந்துரையாடலின் பகுதியாக ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் சம்பாதிப் படலம் பற்றி பேசுகிறேன். கலந்துரையாடல் வாயிலாக நான் தவறவிட்ட இடங்களை நண்பர்கள் சுட்டிக்காட்டுவார்கள் என்பதும், கவிதைகளின் மீது புதிய வெளிச்சம் அவர்களால் பாய்ச்சப்படும் என்பதும் உறுதி.  
வாருங்கள் நண்பர்களே
தொடர்ந்து  கற்போம்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்