நெடுஞ்சாலையில் நின்றிருக்கும் அடர் வண்ணமாருதி
நேற்றிரவு குப்பத்திலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தோம். வேலூரைத் தாண்டியவுடன் மழை பிடித்துக் கொண்டுவிட்டது. வண்டியின் முன்பகுதிக் கண்ணாடியில் படியும் மழை தண்ணீரைத் துடைத்து விடும் வைப்பர் சரியாக வேலை செய்யவில்லை. நண்பர் முனியப்பன் சிறப்பாகவே ஓட்டுவார். நேற்று அவருக்கும் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்த அளவு மழை அடித்துக் கொட்டியது. எனக்கு சுஜாதாவின் சிவப்பு மாருதி என்ற சிறுகதை நினைவுக்கு வந்துவிட்டது. நம்முடையதும் மாருதி கார் தான். சிவப்பு நிறம் இல்லை என்றாலும் அடர் நிறம் . பெங்களூரூவிலிருந்து சென்னைக்கு காரில் வரும் குடும்பம் சந்திக்கும் நெருக்கடி தான் கதை. குப்பம் கூட பெங்களூருக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. அந்தக் கதையில் வருபவர்கள் போல நானும் ஒரு திருமணத்தில் பங்கேற்கவே சென்னை வந்து கொண்டிருக்கிறேன். எனது மூத்த மகன் அபிஷேக் காரின் வலது பக்க கதவைத் திறந்து சாலையில் இறங்கி பழுது நீக்குவது பற்றி நண்பர் முனியப்பனிடம் பேசிக் கொண்டிருந்தான். கார் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஏதாவது நடக்கக் கூடாத...