பாரதி என்னும் நிகழ்வு
பாரதி பற்றி விடுதலைப் போராட்ட வீரர் திருமிகு வ. ரா அவர்கள் எழுதிய நூல் மகாகவி பாரதியார். பாரதியாரின் வாழ்வை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த புத்தகத்தில் வ.ரா முன்வைத்துள்ளார். பக்தன் தெய்வத்தை ஆராதிப்பது போல் பாரதியை அவர் கொண்டாடுகிறார். 28 அத்தியாயங்களில் ஆற்றோழுக்கான நடையில் பாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை குறித்த சித்திரத்தை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது. தாயில்லாப் பிள்ளையாக, தந்தையின் பரிவைப் பெற்ற பையனாக, மொழியை கற்றுக் கொள்வதில் அளவு கடந்த திறமை கொண்ட இளைஞனாக பாரதியின் தொடக்க கால வாழ்க்கை விளக்கப்பட்டிருக்கிறது. ஜி. சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி அய்யங்கார், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் முதலிய அற்புதமான நண்பர்களால் பாரதி சூழப்பட்டிருக்கிறார். இந்த புத்தகம் பாரதியின் புதுவை வாழ்க்கை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. பாரதியின் வாழ்வில் படைப்பூக்கம் மிக்க காலகட்டம் என்று புதுவை காலகட்டத்தையே சொல்ல முடியும். பாரதிக்காக வ.ரா மொழியில் அமைத்த பேராலயம் இந்நூல். . இந்த ஆலய மூலஸ்தானத்தில் பாரதி இருப்பத...