Posts

Showing posts with the label ஒருபால்

இருக்கிறது, ஆனால் தொலைவில்

  ஒருபால் திருமணம் குறித்த வழக்கை மாண்பமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது, நாடாளுமன்றமே இது தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று  மாண்பமை உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.   வருத்தமாக இருக்கிறது  இது. மத விழுமியங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் பொதுவாக அரசியல் கட்சிகள் குறிப்பாக தற்போதய ஆளும் கட்சி ஈடுபடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது .  நாடாளுமன்றத்தில் திரு சசிதரூர் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை  காங்கிரஸ் கட்சியே ஆதரிக்காதநிலையில் பாஜ க பற்றிப் பேசுவதே பிழை.  எனக்கு ஒரு மாணவரைத் தெரியும். பெண்களுடன் இருப்பதிலேயே அவர் நிறைவாயிருந்தார். பெண்களும் அவரை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தார்கள். அவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறார் என்ற செய்தி அப்புறம் தெரியவந்தது. அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் சொல்லும் செய்திதான்  என்ன?  ஒருவர் தம்மை எப்படி உணர்கிறார் என்பது முற்றிலும் அவர் கையில் தான் இருக்கிறது என்று சொல்வது தவறு. . அது அவரையும் கடந்தது.  நாம் ஒருவரை எப்படி அழைக்க வேண்டும் என்பதைக் கூட அவரிடம் கேட...