Posts

Showing posts with the label அஞ்சலி

அஞ்சலி; எழுத்தாளர் அரவிந்தன்

எழுத்தாளர் அரவிந்தன் இன்று மறைந்தார் என்று எஸ். ரா அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. எழுத்தாளர் சைலபதி, கவிஞர் சங்கரராம சுப்பிரமணியன் மூலம் அறிமுகம் . நாங்கள் நடத்தி வந்த சென்னை அண்ணாநகர் ஆய்வு வட்டம் சார்பில் அவருடைய பொன் நகரம் என்ற நாவலுக்காக ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். இரவு மங்கிய வேளையில் சென்னை அண்ணாநகர் லியோ பள்ளி வாசலில் நின்று இலக்கியம் குறித்து பொதுவாக அவர் பேசிக் கொண்டிருந்த ஞாபகம்.   அஞ்சலி ‌ 

பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்களுக்கு அஞ்சலி

திராவிடப் பல்கலைக்கழக மேல் நாள் துணை வேந்தர் பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள்  அமெரிக்காவில் மறைந்தார் என்னும் செய்தி கிடைத்தது. 2005 முதல் 2008 வரை திராவிட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் ஜி. லட்சுமி நாராயணா அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள். அவருடைய காலகட்டத்தில் தான் எனக்கு பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. நான் கன்னடத்தில் இருந்து மொழிபெயர்ப்புகள் செய்ய வேண்டும் என்று என்னை அவர் அதிகம் ஊக்கப்படுத்தினார். அம்மாவிற்கு சிறந்த பெண்மணி என்று நம் பல்கலைக்கழகத்தின் சார்பில் விருது வழங்கி சிறப்பித்தார்கள். பல்கலைக்கழகம் தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த விழா மலரில் அம்மாவின் பெயர் புகைப்படத்துடன் நிரந்தரமாக இடம்பெறும் படி செய்தார்கள். என் தனி வாழ்வில் நான் சந்தித்த நெருக்கடிகளின் போது குடும்பப் பெரியவர் போல ஆலோசனைகள் வழங்கியதுண்டு.  இவையெல்லாம் அவர் பற்றிய இனிய நினைவுகள். துறை தொடர்பான கலந்தாய்வு கூட்டங்களில் அவருடைய இன்னொரு முகம் வெளிப்படுவதைக் கண்டு வியந்ததுண்டு.  எஸ் எல் பைரப்பாவின் பர்வா‌ நாவலை கன்னட மொழியிலிருந்து தெலுங்கு மொழியில் ம...

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மோகன் கூப்பிட்டு அதைக் கூறியபோது அதிர்ச்சி, எரிச்சல், துக்கம் ,ஏமாற்றம் எல்லாமும் ஆக இருந்தது.  திங்கட்கிழமை காலை அவர் விளையாட்டாக என்னுடன்  தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். இது உண்மை என்றால் வியாழக்கிழமை அவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளத்தான் விருப்பமில்லை. நம் விருப்பமெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வேறு கதை.  செய்யாறு கல்லூரியில் அவர் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் காலத்திலிருந்தேஅறிமுகம் உண்டு என்றாலும், அப்பா இல்லாமல் அழுத என் அன்புத் தங்கை உமாவுக்கு (பேராசிரர் அ மோகன் அவர்களின் மனைவி)  அவர் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்ததை அறிந்த போது தான் அவர் மீது எனக்கு இன்னும் அன்பும் மதிப்பும் அதிகரித்தது. சம்பிரதாயத்துக்காக ஒரு முறை மட்டும் அது கொடுக்கப்படவில்லை. அண்ணனுடைய சீர் உமாவை வந்து சேர்வது வருடம் தோறும் நிகழும் ஒரு வழக்கமாக இருந்தது.  .  நண்பர் ஒருவரின் முனைவர்ப் பட்டம் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொள்ள அமைந்தது. இயல்பாகவே சிலருடன் மனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. எனக்கு அப்படி ஒரு அந்தரங்கமான நெ...

அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்

புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது  . அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு.  சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை‌ வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை.  என்னுடைய நண்பர்  முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம்.  சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தி...

ஆசிரியர் சேலம் சங்கருக்கு அஞ்சலி

நான் படித்த தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியில் வரலாற்றுப் பாடம் கற்பித்த ஆசிரியர் சேலம் சங்கர் அவர்கள். எங்கள் ஆசிரியர் பள்ளியில் அறியப்பட்டது வரலாற்று ஆசிரியர் என்பதை விட ஓர் இலக்கிய ஈடுபாட்டாளராக. தனது கம்பீரமான குரல், அடுக்கு வசன நடை இவற்றால் எங்கள் மனதில் இடம் பிடித்தார். பள்ளி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் படித்த காலத்தில் அவர் தான் தொகுப்பாளர். தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் சரளமாகப் பேசுவார். சேலம் சங்கர் எம் ஏ என்று மேடையில் அவர் சொல்வதே அழகு.  நிலவோ அந்த வானத்திலே நான் நின்று கொண்டிருந்தேன் மோனத்திலே வந்தால் வஞ்சி தேரினிலே நான் தந்தேன் நெஞ்சை அவள் பாரினிலே என்று தொடங்கும் கவிதை ஒன்று இப்படி முடியும் மறைந்தவள் மறைந்தே போகட்டும் அவள் மங்கல வாழ்வு வாழட்டும்  நிலவில் அவள் முகம் தெரியட்டும் அந்த நினைவில் என் கதை முடியட்டும் நாங்கள் இந்த கவிதையில் பித்தாகி அலைந்திருக்கிறோம். மோகன் இளங்கலை நேர்முகத் தேர்வில் இந்தக் கவிதையைச்சொல்லித்தான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இடம் பெற்றுங்கொண்டான்.  ஒட்டு மாங்கனி, எச்சில் இரவுகள் என்று சில சினிமா...