Posts

Showing posts with the label கவிதை

கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்

        இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்‌          பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. .  இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.            ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.     ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில்  உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.‌ ஓர் எடுத்துக்காட்டு.     ஏதிலிகளின் ஆண்டவரே     உமது ஜெபக்...

சந்தத்தின் சிறு நடனம்

கவிஞர் வி. சங்கர் அவர்களின் சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற கவிதை தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் ஒவ்வொரு கவிதையையும் படித்திருக்கிறேன். அர்த்தம் பற்றி எல்லாம் அப்புறம் பேசலாம். சந்த அனுபவத்திற்காகவே ஒருமுறை படித்துப் பார்க்கலாம். நவீன கவிதைகளில் காணப்படும் ஓசை வறட்சியை இந்தத் தொகுப்பு போக்கிவிட்டது என்று கவிஞர் லட்சுமி மணிவண்ணன் அவர்கள் முன்னுரையில் கூறியிருக்கிறார். நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன் . 

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

சாட்சி 1

அடித்துக் கொட்டுகிறது மழை!  நனைந்தபடி செல்கிறது எருமை மாடு!  ( 2000க்கு முன் எழுதப்பட்டதுஒ)

ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது

எழுக என்றேன்  எழுந்தன மலைகள் விரிக என்றேன்  விரிந்தன வெளிகள் சுழல்க என்றேன்  சுழன்றள கோள்கள் ஆகுக என்றேன்  ஆனது உலகம் ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபோது என்ற கவிஞர்   பொன்முகலியின் தொகுப்பிலிருந்து  தேவ தேவன் மற்றும் இசை இருவரின் செல்வாக்கு பொன்முகலியிடம் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நவீன ஆணுக்குரிய அத்தனை சவால்களும் நவீனப் பெண்ணுக்கும் உரியவை என்பது இந்த தொகுப்பில் நிறுவப்படுகிறது. அந்தரங்கமான அலைக்கழிப்புகளும் பதற்றங்களும் உடைய ஒருத்தி நம்முடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மனப்பதிவை பொன்முகலியின்  கவிதைகள் அளிக்கின்றன.  ஆகுக என்றேன் ஆனது உலகம் (உலகம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும்  ஒன்றுதான் ஒப்புக்கொள்கிறேன். ) இந்த நாள் கொண்டாட்டத்துக்குரியது. காரணம், நமது முன்னால்  ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது! 

தேவதை

காட்டுக் கோயிலில்  உக்கிர தேவதை,  கண்மூடிக் கவிழும் பக்தன் காரித் துப்பியபடி தொலைவில் நடக்கிறான் வழிப்போக்கன்           ( 2009 க்கு  முன்பு எழுதியது) 

கேள்வி 2

  அப்படி என்னதான் பேசிக் கொள்ளும்?  சாவை நோக்கிய  சைக்கிள் பயணத்தில் கோழிகள்!  ( 2005 க்கு முன் எழுதப்பட்டது) 

கேள்வி 1

ஆளற்ற சாலை,  எந்தப் பேருந்துக்காகக்  காத்திருக்கின்றன மின் கம்பங்கள்  1999 _காலகட்டத்தில் எழுதியது) 

அப்பாசாமி

அப்பப்ப பேசுவார் யூதச்சாமி  பூ பழம் மட்டும்தான் பிராமண சமி கிருஷ்ணா கோவிந்தா வைஷ்ணவ சாமி மந்திரம் கேட்காத திராவிடச் சாமி அம்மா போடுவாள் ஆமாம் சாமி அவளுக்கோ அப்பா சாமி என்னைக் கேட்டால் ஆள விடு சாமி (2010 க்கு முன்பு நான் எழுதியது)

முதல் கவிதை

பாரத நாடு பழம்பெரும் நாடு பண்புள்ள மாந்தர் வாழும் நாடு பண்பும் பரிவும் மிக்க நாடு பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடு சாதி சமயம் கடந்த நாடு ஜனநாயகம் ஓங்கிய நாடு வாழ்க நாடு நம் நாடு வெற்றி நடை போடும் பாரத நாடு இது ஏழாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கவிதை என்று நினைவு. இந்தக் கவிதை என்னால் எழுதப்பட்டதா இல்லை நான் படித்த பாட புத்தகத்தில் இருந்ததா என்று இப்போது சரியாக சொல்ல முடியவில்லை. நடுவில் ஒரு வரியை கூட இப்போது நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் அதிகாலை வேளையில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்ததும் அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு கவிதை எழுதுகிறேன் என்று சொன்னது மட்டும் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.  ஆமாம், நிஜம்தான்.  ஒரு நாள் அதிகாலை கவிதை எழுத உட்கார்ந்திருக்கிறேன்!   அதை சொல்லத்தான் இந்த  கவிதையை நினைவு படுத்திக் கொண்டேன். 

சாலையொர சந்திப்புகள்

கடிகார முட்களுக்கு    பயப்படாமல் காத்திருக்கும்.  பக்கத்துத் தெருவில் எனது தடியொசை   கேட்கும் போதே எனக்குக் கேட்கும் உறுமல் சத்தம்.  குரலைக் கேட்டே  எதையும் புரிந்து கொள்ள முடியும்.  நான் அடிக்கவும் அது கடிக்கவும் போவதில்லை என்றாலும் சடங்குக்குக் குறைப்பவைகளை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது கவிதை எழுத வேண்டும் என்று மனசுக்குள் உறுத்தும்!   நான் படித்த சென்னை கிருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு கவிதை சந்திப்பு நிகழும். திறந்த வெளியில் மரத்தடியில் புல்வெளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் வட்டமாக உட்கார்ந்து கவிதைகளை வாசித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது  வழக்கம். இலக்கியம் சார்ந்த எனது நுண்ணுணர்வு வகுப்பறைக்கு இணையாக  ஏன் மேலாகவும் கூட அந்த சந்திப்புகளில் வளர்ந்திருக்கிறது  என்று சொல்வேன். பிற்காலத்தில் தொலைக்காட்சி திரைப்படம் சிற்றிதழ்கள் முதலிய பல்வேறு ஊடகங்களில் முக்கியமான பங்களிப்பைச் செய்த சிலர் அப்போது இளைஞர்களாக எங்களுடன் வெள்ளிக்கிழமை கவிதை சந்திப்புகளில் பங்கேற்றார்கள். நிகழ்வை முன்னெடுத்த ஆசிரியர்...