ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது

எழுக என்றேன்
 எழுந்தன மலைகள்
விரிக என்றேன் 
விரிந்தன வெளிகள்
சுழல்க என்றேன்
 சுழன்றள கோள்கள்
ஆகுக என்றேன்
 ஆனது உலகம்
ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபோது என்ற கவிஞர்   பொன்முகலியின் தொகுப்பிலிருந்து 
தேவ தேவன் மற்றும் இசை இருவரின் செல்வாக்கு பொன்முகலியிடம் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நவீன ஆணுக்குரிய அத்தனை சவால்களும் நவீனப் பெண்ணுக்கும் உரியவை என்பது இந்த தொகுப்பில் நிறுவப்படுகிறது. அந்தரங்கமான அலைக்கழிப்புகளும் பதற்றங்களும் உடைய ஒருத்தி நம்முடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மனப்பதிவை பொன்முகலியின்  கவிதைகள் அளிக்கின்றன. 
ஆகுக என்றேன்
ஆனது உலகம்
(உலகம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும்  ஒன்றுதான் ஒப்புக்கொள்கிறேன். ) இந்த நாள் கொண்டாட்டத்துக்குரியது. காரணம், நமது முன்னால் 
ஒரு கவிதை நிகழ்ந்திருக்கிறது! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்