Posts

Showing posts with the label தொடர்

அசைவறு மதி

பழனிக்குமார் எழுதும் சுய முன்னேற்றத் தொடர் உயிர்மை  இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அசைவருமதி என்று பெயர்.  ஏப்ரல் 25 2026 அன்று நான் வாசித்தபோது 17 கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பழனிக் குமார் அறிவுரை மழை பொழியாமலும் வாசகர்களைச் சிரிக்க வைக்கிறோம் என்று அசட்டுத்தனம் காட்டாமலும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.        ஓர் எடுத்துக்காட்டு.        ஓர் செயலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். முதல் நாளில் உற்சாகமாக ஆரம்பித்தோம். நம்முடைய உற்சாகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடுகிறது. நம்முடைய முதல் நாள் உற்சாகத்தை மறுபடியும் எவ்வாறு திரும்பப் பெறுவது? பழனிக் குமார் விளக்குகிறார்.      நம்முடைய வாழ்வில்  நாம் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும் போது குழந்தை நிலை, மத்திய வயது நிலை, முதுமை நிலை, நிபுணத்துவ நிலை  இவற்றில் ஒரு நிலையில் அமைகிறோம் என்கிறார் பழனிக் குமார். குழந்தை நிலையில் ஒரு செயலைச்  செய்யும் போது நம்மிடம் அச்சமும் படபடப்பும் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடவும் செயலை சிறப்பாக மேற்...

முனைக அறிமுகம்

நன்கு படிக்கக்கூடிய மாணவர்கள் ஒரு தரமான முனைவர்ப்பட்ட ஆய்வேட்டை உருவாக்க ஏன் சிரமப்படுகிறார்கள் என்ற வினா வெகு நாட்களாக என்னுள் இருக்கிறது. இதற்கான காரணங்களை விவாதிக்க வேண்டும், எனக்குத் தோன்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தத்  தொடர்.  இங்கு நான் விவாதிக்கவிருக்கும் சிக்கல்கள் பல என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு காலத்தில் எனக்கும் இருந்தன. நான் அவற்றுள் சிலவற்றை எவ்வாறு எதிர்கொண்டேன், வேறு சிலவற்றை இன்னும் எவ்வாறு எதிர்கொண்டிருக்கலாம் என்பதை விளக்குவதே இந்தத் தொடர்.  இந்தத் தொடரில் நான் பேசவிருக்கும் விஷயங்கள் பலவற்றை திராவிடப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களிடம் தனிப்பட்ட உரையாடல்களிலோ அல்லது பொது வெளியிலோ சொல்லியிருக்கிறேன். அவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இந்த முயற்சி.  நம்முடையதாக நாம் இன்று உணரும் சிக்கல்கள் பல நமக்கு மட்டும் உரிய சிக்கல்கள் அல்ல என்பதை இப்போது அடிக்கடி உணர்கிறேன்.  கேரள மாநிலம்,பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் நண்பர் க. கதிரவனும் நானும் இந்தப் பொருள் குறித்து ஒரு கட்டுரைத் த...