அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்
புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது . அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு. சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை. என்னுடைய நண்பர் முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தி...