Posts

Showing posts with the label அறிவிப்பு

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்

எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog  என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork  Muse  என்பதாகும்.      படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது.              சமூகவியல் பேராசிரியராகிய  ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய   The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்த...

பேயோட்டும் வழி

தகவல் தொடர்பு சாதனங்கள் நம்மை எந்த அளவிற்கு இணைக்கின்றனவோ அதே அளவிற்கு சில புதிய சிக்கல்களையும் கொண்டு வருகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் இந்தச் சிக்கலிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்று தான் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நானும் இந்தப் பலரில் ஒருவன் தான். விலைமதிப்பற்ற பொழுதுகள், படைப்புத்தருணங்கள் அலைபேசி திரையில் வரும் சில செய்தி அறிவிப்புகளால் வீணாகியிருக்கின்றன.  நானும் இந்தச் செய்தி அறிவிப்புகளை என் அலைபேசியின் ஹோம்ஸ்கிரீனிலிருந்து விலக்க என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். மாணவர்களையும் கேட்டேன். எதுவும் நடக்கவில்லை.  இன்று அபிஷேக்கிடம் கேட்டபோது அவன் இந்த பேயை மரத்தில் எப்படி ஆணி அறைந்து கட்டி வைப்பது என்று அதனிடமே கேட்டான். google அறிவிப்புகளை எப்படி நிறுத்துவது என்று கூகுள் செய்து கேட்டான். என்னை இப்படிக்கட்டிப் போடலாம் என்று பேயே வழியையும் சொல்லிக் கொடுத்தது.  நம்முடைய அலைபேசியில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை திறக்க வேண்டும். அதில் செட்டிங்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள் செல்ல வேண்டும். அதில் அதர்ஸ் என்ற பகுதி இருக்கும். அதற்குள்ளும் செல்ல வேண்டும். அதி...

எழுத்தாளர் சி. முத்துக் கந்தன் நாவல்கள் குறித்து பேசுகிறேன்

பேராசிரியர் சி முத்துக்கந்தன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் எங்களுடன் படித்தார். எங்களுக்கு சில ஆண்டுகள் இளையவர் அவர். சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ் துறையில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். அடிமரம், அகன்ற பேழை, வேறு யாருக்கும் அனுமதி இல்லை ஆகிய மூன்று நாவல்களை முத்து எழுதியிருக்கிறார்.  இந்த நாவல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. பழங்குடி இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எழுத்துப் பயிற்சி வகுப்புகளையும்  முத்துக்கந்தன் நடத்துகிறார்.  எழுத்தாளர் சி. முத்துக்கந்தன்  அவர்கள் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று  உரையாற்றுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறை சார்பில் ஏப்ரல் 9 வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களைச் சந்திக்க ஆசையாக இருக்கிறது. 

திரு. சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி

உயிர்க்காடு தொகுப்பிற்கு திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். மதிப்புரை அவருடைய வலைப் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இணையத்தில் தற்செயலாக இன்று வாசிக்கக்கிடைத்தது. ஓர் இனிய நினைவு!  முற்றிலும் தற்செயலானது. அதனால்தான் இவ்வளவு இனிக்கிறது! 

நண்பர் அருள்செல்வன் அவர்களுக்கு நன்றி

நேற்று 28 டிசம்பர் 2025 அன்று தினமணி இதழில் ஞாயிறு கொண்டாட்டம் பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா அந்தக் காலத்தில் தினமணி, ஆங்கில இந்து ஆகிய இரு இதழ்களையும் சந்தா கட்டி வீட்டிற்கு வரவழைப்பார். வியாழக்கிழமைகளில் தினமணி இதழில் வெளிவரும் நூலலரங்கம் பகுதியை அந்த காலத்தில் மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தினமணிக்கதிர் இணைப்பிதழில் இடம்பெறும் தொடர்களும் 90களில் மிகப் பிரபலம்.  நீரஜா சௌத்ரி என்பவரின் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். இந்திய அரசியலை விமர்சிக்கும் கட்டுரைகள் அவை. மொழிபெயர்ப்பு கட்டுரைகள் பொதுவாக திங்கட்கிழமைகளில் தான் வெளிவரும். சூழலியல் ஆர்வலர் டாக்டர் ஜீவானந்தம் அவர்களின் கட்டுரைகளை தினமணி வாயிலாக தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெப்சி குளிப்பான விளம்பரத்தில் இந்த உள்ளம் கேட்குதே மோர் என்று விளம்பர வாசகம் ஒன்று இடம்பெறும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே அந்த விளம்பரத்தை தான் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவார்கள். டாக்டர் ஜீவானந்தம் அவர்கள் இந்த உள்ள...

நான் படித்த கல்லூரியில் பேசுகிறேன்

எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமியும் இணைந்து  ஒரு நாள்  கருத்தரங்கை நடத்துகின்றன.  டிசம்பர் 12 2025 வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.         எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசனின் மூன்றாவது நாவல் அனாதை. இந்த நாவலை இருத்தலியல் நோக்கில் அணுகியிருக்கிறேன். தங்கப்பனை  கதிர் நோக்கா கையிருள் என்று வரையறுத்திருக்கிறேன். கை என்ற சொல்லுக்கு சிறுமை என்றும் பொருள் உண்டு. கைக்கிளை என்பதற்கு  சிறிய உறவு என்பதாகத்தான் நம் இலக்கணமரபு விளக்கம் கொடுக்கிறது .         புத்தம் வீடு நாவல் குறித்து நண்பர் சுப்பிரமணி  இரமேஷ் ஒரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார். புத்தமிடு நாவலை நான் இந்த சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் என்பது அன்புத் தோழி பேராசிரியர் ஜெ சுடர்விழியின் கட்டளை. ஒரு மிகச் சிறந்த நாவல் ஒன்றை  படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது         புத்தம் வீடு ஒரு கிளாசிக் ...

தித்திக்கும் தருணங்கள்

ஆசிரியர் தீ . ந.  ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே"   நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது.  உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்"  செய்து நூலாக வெளியிடலாம்.  என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.  குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கட...

அரிமா நோக்கு இதழுக்கு நன்றி

ஹரன் பிரசன்னா ஆக்கங்களில் மாத்வத்துறவியரும் துறவுசார் ஒழுகலாறுகளும் என்ற என் கட்டுரை அரிமா நோக்கு இதழில் வெளி வந்திருக்கிறது. ஹரன் பிரசன்னா எழுதிய மாயப் பெருநதி என்ற நாவலையும் புகைப்படங்களின் நடுவே, சா தேவி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன். இவற்றில் உள்ள மாத்வ வாழ்வியலையும் மாத்வ துறவிகள் குறித்த செய்திகளையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறேன். கல்விப்புல பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரை. சற்றேறக்குறைய ஆறு மாத்ஙகளுக்கு முன்பு அரிமா நோக்கு இதழுக்கு கட்டுரையை அனுப்பி வைத்தேன். ஜனவரி 2025 இதழில் வெளிவந்திருக்கிறது. என் கட்டுரையை பரிசீலித்து வெளியிட்ட பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.‌

‌‌ தொடங்கி விட்டேன்

அம்மா பற்றி நினைவுகளை ஒரு நூலாக எழுத வேண்டும் என்று நண்பர் க. ஜவகர் கேட்டுக்கொண்டார். எனக்குள்ளும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது. நண்பர் ஜவகரின் சொற்கள் அந்த எண்ணத்திற்கு மேலும் உத்வேகம் கொடுத்தன. அம்மாவின் வாழ்க்கை ஏன் முக்கியம்? இரண்டு ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்க அவள் மேற்கொண்ட சலிப்பில்லாத முயற்சிக்காக தனக்குள் இருக்கும் ஒளியை கடைசி வரை தக்க வைத்துக்கொண்ட சாதனைக்காக ஆர்வம் மிக்க மாணவியாகத் தன்னை அவள் முன்வைத்த இயல்புக்காக.  நான் பிறந்தது பரமக்குடியில். அம்மா பற்றிய நினைவுகளை பரமக்குடி, சென்னை, குப்பம் ஆகிய மூன்று ஊர்களை மையமிட்டு  எழுதும் திட்டம்.  அவளின் இளமை வாழ்வை, குழந்தைமையை அறிந்து கொள்ள அவளை விட வயதில் பெரிய அத்தையிடமும் என் சித்தியிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.  என் அலைபேசியில் இருக்கும் கீப் நோட்ஸ் செயலியில் குரல் வழியே தட்டச்சு செய்த பிறகு கணினியில் எடிட் செய்யும் எண்ணம்.  அம்மா பற்றிய பரமக்குடி நினைவுகளை ஏறக்குறைய முடிக்கும் நிலையில் இருக்கிறேன். இதுவரை 26 பக்கங்கள் வந்திருக்கின்றன. இதன்பிறகு சென்னை மற்றும் குப்பம் நினைவுகள் இடையிடையே அவளின் திருமணத்த...

நான் உரையாற்றுகிறேன்

கம்பராமாயணக் கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் வாசிப்பு நிறைவடைந்து விட்டது.  காண்டத்தின் சாரத்தைத் தொகுத்துக் கொள்ளும் நோக்கில் இன்றுமுதல் உரைகள் தொடங்குகின்றன. பிணி வீட்டுப் படலம் குறித்து நான்  வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றுகிறேன்   படலத்தை சுருக்கிச் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அனுமன் இராவணனுக்குச் சொல்லும் அறிவுரைகளை நன்கு விளங்கிக் கொள்ள காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மற்ற அறிவுரைப் பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று நண்பர் ஸ்ரீனிவாஸ் சொல்லிவிட்டார்.  எனவே அவற்றையும் படித்துக்கொண்டு  வருகிறேன்.  இந்த வாத்தியார்  ஸ்ரீநிவாஸ் நிறைய நிறைய வீட்டுப்பாடம்  கொடுக்கிறார்! வாழ்க !  உரை எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும்.  வெள்ளிக்கிழமை சந்திப்போம்! நண்பர்களின் உரைகள் யாவும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 

இன்றுடன் நிறைவு

நாங்கள் முன்னெடுக்கும் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியான சுந்தரகாண்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி சில நாட்களில் காண்டத்தின் கருத்துகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொள்ளும் உரையாடல்கள் தொடங்கும்.  இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! 

நீலி இதழுக்கு நன்றி

Image
கன்னட எழுத்தாளர் வைஷாலி ஹெகடே எழுதிய சிறுகதை  ஒந்து மத்தியானத மீட்டிங். இந்தச் சிறுகதையை. ஒரு நண்பகல் சந்திப்பு என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். சிறுகதை  பிப்ரவரி மாத நீலி இதழில் வெளி வந்திருக்கிறது. .  சிறுகதையை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் வைஷாலி ஹெகடே அவர்களுக்கும், நீலி இதழில் வெளியிட்ட எழுத்தாளர் ரம்யா அவர்களுக்கும்,  மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்த திராவிடப் பல்கலைக்கழகத்  துளுவியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் பி எஸ் சிவகுமார் அவர்களுக்கும் சிறுகதையை வாசிக்கவிருக்கும் உங்களுக்கும் நன்றி.  உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.  இணைப்பு கீழே  https://neeli.co.in/2677/ அறிமுகம் இதழ்கள் Home சிறுகதை ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே February 1, 2024 – தமிழில்: கு. பத்மநாபன் வைஷாலி ஹெகடே (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது...

வாழ்த்துக்கள்

பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் முக்கியமான ஆய்வுகளை முன்னெடுக்கிறார். இலக்கியத் திறனாய்வு, ஆய்வு, தொகுப்பு என பல நிலைகளில் பங்களித்து வருகிறார்.  பேராசிரியர்  வீ. அரசு அவர்களின் மாணவர்.  அண்மையில் சுப்பிரமணி இரமேஷ் எழுதியுள்ள தமிழில் தலித்தியம் என்ற நூலுக்கு பேராசிரியர் க.  பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்பெறும் பஞ்சு  பரிசில் 2023 வழங்கப்படுகிறது.  பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களினைச் சிறப்பிக்கும் வண்ணம்  நடைபெறும் பஞ்சு  75  விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.  பிப்ரவரி  நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை  சென்னை ரோஜா முத்தையா நினைவு நூலக வளாகத்தில்  விழா நடைபெறுகிறது. நண்பர்  இன்னும் நிறைய நிறைய அங்கீகாரங்களைப் பெறவேண்டும்.  வாழ்த்துக்கள் இரமேஷ்! 

பெருங்கைத் தீண்டல்

கல்லூரி மாணவர்கள் குறிப்பாக தமிழ் படிப்பவர்கள் கூடுதலாக எவற்றை யுமே படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தீவிர இலக்கிய மேடைகளிலும், இதழ்களிலும்  அவ்வப்போது ஒலிப்பதுண்டு. . இந்தக் குற்றச்சாட்டில் ஓரளவு அடிப்படை  இருக்கிறது என்று ஒப்புக் கொண்டாலும் கூட எங்களைப் போன்றவர்கள் செய்யக்கூடியது என்ன என்பதே கேள்வி.  வகுப்பில் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தலாம், நூல்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடம்  வளர எங்களால் இயன்றதைச் செய்யலாம். மாணவர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைத்துச் சென்று நூல்கள், எழுத்தாளர்கள் சார்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தலாம். மேலும் சிறிய அளவில் இதழ்களை நடத்தும் முயற்சியில் ஈடுபடலாம். விளைவாக எங்களுடன் இருக்கும் மாணவர்கள்  இலக்கியம்,  இதழியல் இரண்டிலும் அறிமுகமும் அனுபவமும் பெறுவார்கள்.  சென்னை அடையாறில் உள்ள தூய லூயி காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் பள்ளியின் மாணவனாக இருந்தபோது  வெளிச்சம் என்ற ப்ரெயில் இதழை நடத்தியிருக்கிறோம்.  சென்னைக் கிறித்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது நண்பர்கள் ஒன்றிணைந்து ஓடம் என்ற கையெழுத்து இதழை நடத்தியிருக்கிறோம் ...

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு

நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பொருளை க மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள அத்தங்கி மலை சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.  நண்பருடன் சென்னை வருகிறேன். .  நாளை ஜனவரி 7 . 12 மணி அளவில் புத்தக வெளியீடு நடைபெறுகிறது.  எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் அவர்களும் பங்கேற்கிறார். நிகழ்ச்சி எதிர் வெளியீடு அரங்கு F 61 ல் நடைபெறும்   நண்பருடன் நானும் வருகிறேன். நீங்களும் வருவீர்கள் தானே! 

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

Image
இன்று 29 நவம்பர் 2023 அன்று திராவிடப்  பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நமது முதுகலை மாணவர் பி.சக்தி சுப்பிரமணியம் நாயக் தாம் மொழி பெயர்த்த சிறுகதையை வாசித்துக் காட்டினார். தெலுங்கில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.சாய் வம்சி என்பவரின் சிறுகதை. புத்தக உலகு  என்பது மொழிபெயர்ப்புச் சிறுகதையின் தலைப்பு‌ . எட்டு பக்க சிறுகதை.  ஒரே நாளில் முடித்து விட்டார்.  சிறுகதையின் வடிவம் குறித்தோ மொழிபெயர்ப்பின் இயல்பு பற்றியோ விவாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். ஒரு முதுகலை மாணவர் முயன்று செய்திருக்கும் பணியை பாராட்டும் நிமிடம் இது.  நமக்கு மேலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்திருக்கிறார்.  மொழிபெயர்ப்பாளராக இந்த நாளை சக்தி சுப்ரமணியம் பிறந்தநாள் என்று  சொல்லிக் கொண்டாலும் பிழையில்லை.  ஒரு மொழிபெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார். 

நான் உரையாற்றுகிறேன்

சென்னையில் செயல்பட்டு வரும் சங்கத்தமிழ் பூங்கா என்ற அமைப்பின் சார்பில் நவம்பர் 20 மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன். நிகழ்ச்சி இணையம் வாயிலாக நடைபெறுகிறது. பாரதி என்னும் மானுடன் என்பது தலைப்பு. நிகழ்விற்கு என்னை அழைத்த நல்லாசிரியர்  திருமதி கற்பகம் அவர்களுக்கு நன்றி. இணைப்பு கீழே.  https://us02web.zoom.us/j/5342209152?pwd=MVAzTVRKazNlVzZ6SU0xOS9rUm5HUT09 Zoom 534 2209152 passcode 123

பல்கலைக்கழகத்தில் பேசினேன்

பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நவம்பர் 8 அன்று   Deep work Rules for focus in the destructed world என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன்.  ஒன்பதாம் தேதி பேசுவதாகத் தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால்  ஒரு நாள் முன்பே  பேசி விட்டேன். இந்த புத்தக அறிமுகம் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு என்று சொல்லியிருந்தேன். பரிசு தருவது இன்பம். முன்கூட்டியே கொடுக்கும் வாய்ப்பமைந்தால் பேரின்பம்!  புத்தக அறிமுகத்தை விரைவில் எழுத வேண்டும். 

பனிமலர் வாழ்க!

இன்று  எங்கள் புதன் வட்ட நிகழ்வில் வ பனிமலர் துப்பட்டா போடுங்கள் தோழி என்ற கீதா இளங்கோவனின் நூலை அறிமுகப்படுத்தினார்.  மலர் நமது தமிழ்த்துறையின் ஆய்வு மாணவி. நூல் குறித்த தமது கருத்துக்களை பனிமலர் எழுதி வந்திருந்தமை சிறப்பு‌ . பெண்ணியம் குறித்து தீவிரமான உரையாடல்கள் நடைபெற்றன. அண்மையில் விவாதப்  பொருளான ஒருபால் திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நானும் நிகழ்வில் பங்கேற்றேன். நண்பர் விஷ்ணு குமரனும் சில கருத்துக்களை தீவிரமாக முன் வைத்தார்.பனிமலர் மேலும் மேலும் சிறந்த நூல்களை அறிமுகப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். மகள் மீது அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் பனிமலரின் அப்பாவுக்கு என் அன்பு. பனிமலர் வாழ்க.! 

அருகழைக்கிறது அது

இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்ப் பேரிலக்கியமான கம்பராமாயணத்தின் 5 ஆயிரம்  பாடல்களை இன்றுடன் நிறைவு செய்யவிருக்கிறோம். மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பத்தாயிரம் பாடல்களை நிறைவு செய்யும் நாளும் நெருங்குகிறது, ஆம்!  அதோ அங்கேதான் இருக்கிறது, நம்மை அருகழைக்கிறது அது!