ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இன்று 29 நவம்பர் 2023 அன்று திராவிடப்  பல்கலைக்கழக புதன் வட்ட

நிகழ்வில் நமது முதுகலை மாணவர் பி.சக்தி சுப்பிரமணியம் நாயக் தாம் மொழி பெயர்த்த சிறுகதையை வாசித்துக் காட்டினார். தெலுங்கில் இருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.சாய் வம்சி என்பவரின் சிறுகதை. புத்தக உலகு  என்பது மொழிபெயர்ப்புச் சிறுகதையின் தலைப்பு‌ .
எட்டு பக்க சிறுகதை.  ஒரே நாளில் முடித்து விட்டார்.  சிறுகதையின் வடிவம் குறித்தோ மொழிபெயர்ப்பின் இயல்பு பற்றியோ விவாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். ஒரு முதுகலை மாணவர் முயன்று செய்திருக்கும் பணியை பாராட்டும் நிமிடம் இது. 
நமக்கு மேலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைத்திருக்கிறார். 
மொழிபெயர்ப்பாளராக இந்த நாளை சக்தி சுப்ரமணியம் பிறந்தநாள் என்று  சொல்லிக் கொண்டாலும் பிழையில்லை. 
ஒரு மொழிபெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார். 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்