Posts

Showing posts with the label அறிமுகம்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்

எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog  என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork  Muse  என்பதாகும்.      படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது.              சமூகவியல் பேராசிரியராகிய  ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய   The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்த...

அசைவறு மதி

பழனிக்குமார் எழுதும் சுய முன்னேற்றத் தொடர் உயிர்மை  இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அசைவருமதி என்று பெயர்.  ஏப்ரல் 25 2026 அன்று நான் வாசித்தபோது 17 கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பழனிக் குமார் அறிவுரை மழை பொழியாமலும் வாசகர்களைச் சிரிக்க வைக்கிறோம் என்று அசட்டுத்தனம் காட்டாமலும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.        ஓர் எடுத்துக்காட்டு.        ஓர் செயலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். முதல் நாளில் உற்சாகமாக ஆரம்பித்தோம். நம்முடைய உற்சாகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடுகிறது. நம்முடைய முதல் நாள் உற்சாகத்தை மறுபடியும் எவ்வாறு திரும்பப் பெறுவது? பழனிக் குமார் விளக்குகிறார்.      நம்முடைய வாழ்வில்  நாம் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும் போது குழந்தை நிலை, மத்திய வயது நிலை, முதுமை நிலை, நிபுணத்துவ நிலை  இவற்றில் ஒரு நிலையில் அமைகிறோம் என்கிறார் பழனிக் குமார். குழந்தை நிலையில் ஒரு செயலைச்  செய்யும் போது நம்மிடம் அச்சமும் படபடப்பும் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடவும் செயலை சிறப்பாக மேற்...

கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்

        இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்‌          பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. .  இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.            ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.     ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில்  உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.‌ ஓர் எடுத்துக்காட்டு.     ஏதிலிகளின் ஆண்டவரே     உமது ஜெபக்...

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன். 

விண்ணில் விரியும் சிறகுகள்

கடல் பெரியது. அது எல்லா நதிகளையும் தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. வானம் பெரியது, ஏனென்றால் அது  நம் கற்பனையால் விரிகிறது.  உள்ளத்தை கடலென்றும், வாழ்வை வானென்றும் வகுத்துக் கொள்ளலாம்.   காலம் இடம் பற்றிய நமது பிரக்ஞையை கலைத்துப் போட்டு தாங்கள் விரும்பும் பிரபஞ்சத்தை படைக்க முயலும் படைப்பாளிகள் ‌ நட்சத்திரங்களைக் கொண்டு கழங்காடும் அரக்கர் குலப்  பெண்களாக கம்பனில் வெளிப்படுகிறார்கள். விண்ணில் பறந்து வந்து சிறுநீர் கழிக்கும் வயசங்களாக இரா .முருகன் நாவல்களில் மனிதர்கள் வருகிறார்கள்.  காலம், இடம், தர்க்கம் இவை கலைஞர்களுக்கு  உயிரல்ல, வெறும் அணிகலன்கள்  . 1800 காலகட்டத்தில் நடக்கும் கதை. ஆங்கில அரசு, சிதிலமடைந்த நில உடமை விழுமியங்கள் , வியாபாரமும் குமாஸ்தாத்தனமும்  கௌரவம் மிக்க பணிகளாக கருதப்படும் காலம்.  புகையிலை வியாபாரம் செய்யும் சுப்பிரமணிய ஐயர், சித்தம் பேதலித்த மூத்த மகன் சாமிநாதன்,  பக்கத்து வீட்டு ஜமீன்தார், இறந்த பிறகும் சம்போகம் தேடும்  கிழவர், அவ்வப்போது  வீட்டுக்கு வந்து போகும் மூத்தகுடிப் பெண்கள்  என்று தொடரும் ந...

பாரதி என்னும் நிகழ்வு

Image
பாரதி பற்றி விடுதலைப் போராட்ட வீரர் திருமிகு வ. ரா அவர்கள் எழுதிய நூல் மகாகவி பாரதியார். பாரதியாரின்  வாழ்வை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இந்த புத்தகத்தில் வ.ரா முன்வைத்துள்ளார். பக்தன் தெய்வத்தை ஆராதிப்பது போல் பாரதியை அவர்  கொண்டாடுகிறார். 28 அத்தியாயங்களில் ஆற்றோழுக்கான நடையில் பாரதியின் ஒட்டுமொத்த வாழ்க்கை குறித்த சித்திரத்தை இந்த புத்தகம்  வெளிப்படுத்துகிறது.  தாயில்லாப் பிள்ளையாக,  தந்தையின் பரிவைப் பெற்ற பையனாக,  மொழியை கற்றுக் கொள்வதில் அளவு கடந்த திறமை கொண்ட  இளைஞனாக பாரதியின் தொடக்க கால வாழ்க்கை விளக்கப்பட்டிருக்கிறது.  ஜி. சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி அய்யங்கார், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் முதலிய அற்புதமான நண்பர்களால் பாரதி சூழப்பட்டிருக்கிறார்.  இந்த புத்தகம் பாரதியின் புதுவை வாழ்க்கை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. பாரதியின் வாழ்வில் படைப்பூக்கம் மிக்க காலகட்டம் என்று புதுவை  காலகட்டத்தையே சொல்ல முடியும்.  பாரதிக்காக வ.ரா மொழியில் அமைத்த பேராலயம் இந்நூல். . இந்த   ஆலய மூலஸ்தானத்தில் பாரதி இருப்பத...

எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! . 

எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?    டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.  2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான்.  அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழு...