எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌ 
சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?   
டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும். 
2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான். 
அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழுதுகிறார். ஆனால் அமெரிக்க அரசியல் பற்றி எழுதும் பத்மா அர்விந்த் கட்டுரைகளை படிக்கத்தான் கொஞ்சம் கூடுதல் பொறுமை வேண்டும். ஸ்ரீதேவி கண்ணன், கோகிலா பாபு ஆகியோரின் கட்டுரைகளும் சிறப்பானவை. ஆபீஸ் என்ற நாவல்  60 அத்தியாயங்களை நெருங்கி விட்டதாக நினைவு கடவுளுக்குப் பிடித்த தொழில் என்ற பெயரில் உயிர்த்தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் கட்டுரை தொடர், உயிருக்கு நேர் என்ற பெயரில் தமிழ் மறுமலர்ச்சியாளர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் தொடர் என வாரத்தில் புதன்கிழமை தோறும் மெட்ராஸ் பேப்பர் சுவாரஸ்யமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் மெட்ராஸ் பேப்பர் இதழும் அருஞ்சொல் இதழும் ஒன்று படுகின்றன. . ஓர் இதழுக்கு அரசியல் நோக்கம் ஒன்று இருப்பது  தவறெல்லாம் இல்லை. அதே சமயம் தாம் வாசிக்கும் இதழில் பலவகைப் பட்ட குரல்களைக் கேட்க முடிந்தால்மாற்றுக் குரலையும் கேட்க முடிந்தால் அது வாசகர்களின் அதிர்ஷ்டம் 
எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர் வெள்ளிவிழா காண வேண்டும்  பொன்விழா கொண்டாட வேண்டும், நான் இந்த இதழை தொடர்ந்து படிக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

தலையாலே தான் தருதலால்

நீலி இதழுக்கு நன்றி

மற்றும் ஒரு மைல்கல்!