Posts

Showing posts with the label தமிழ்விக்கி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 7 மணிக்கு நான் ஈரோட்டில் இறங்கினேன் நண்பர் பாரி ஈரோட்டில் வந்து என்னை அழையுங்கள் அண்ணா என்று வாட்ஸ் அப் செய்தி அனுப்பி இருந்தார் அதற்குத் தேவை இருக்கவில்லை ரெட் டாக்ஸி சேவை சிறப்பாக அமைந்தது கவுண்டச்சி பாளையத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை நான் அடையும்போது வாசலில் நூற்பு  சிவகுருநாதன் அவர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் நண்பர் சிவகுருநாதன் வந்து அழைத்துச் சென்றார்.  மாடிக்கு செல்லும்போது பேராசிரியர் இளங்கோவன் அவர்களின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. குடந்தை சுந்தரேசனார் குரலை தாம் ஆவணப்படுத்திய அனுபவத்தை பேராசிரியர் பகிர்ந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடித்து இரவு உணவு சாப்பிட்டோம்.  நண்பர்களுடன் நான் நின்று யோகம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அன்புடன் என் கையைப் பிடித்துக் கொண்டார். குருகு இணைய இதழின் ஆசிரியர் நண்பர் அநங்கன் அவர்களுடன் தீ நம் ஸ்ரீ கண்ட அய்யா அவர்களின் இந்திய கவிதையியல் நூல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  அவரும் சிவகுருநாதனின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே என்னுடன் பேசிக் ...