Posts

Showing posts with the label விழா

பண்ணைக்கு ஒருவன்

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு கவிஞர் விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது. ஜூன் 8 அன்று கவிக்கோ மன்றத்தில் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கன்னட எழுத்தாளர்  வசுதேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நடத்தும் சந்தா‌ புஸ்த்தகா‌ என்ற பதிப்பகத்தின் சார்பில் ஆசிரியர் ஜெயமோகனின் ஏழாம் உலகம்  நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. கன்னட எழுத்தாளர் சாந்தி கே அப்பண்ணா நாவலை தலாதளா என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.  ஏழாம் உலகம் நாவலை இரண்டு முறை படித்திருக்கிறேன். இப்போது கன்னடத்தில் படிக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நாவலின் ஒவ்வொரு பகுதி புதிய திறப்பை முன் வைக்கிறது. எருக்குவிற்கும் சீண்டன்  நாயருக்கும்‌ இருக்கும் பந்தம் இந்த முறை! ஒரு துளி அன்பே அன்றி நமக்கு வேண்டியது வேறு என்ன!  நாவலை வெளியிடும் பேறு எனக்கு அமைந்தது!  அது ஆசிரியரின் கனிவும் நண்பர்களின் அன்பும் அன்றி வேறென்ன!  இந்தத் தருணத்தில் ஒன்று சொல்லிக் கொள்வேன்  நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!  நான் தகுதிப் படுத்திக் கொள்கிறேன்!  கடல் கடந்து வந்த...

கொடியேற்றம்

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 21 22 தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது. இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இரா முருகன் எழுதிய இராமோஜியம் நாவலை பெருந்தொற்றுக் காலத்தில் வாசித்திருக்கிறேன்.  அரசூர் வம்சம் வரிசை நாவல்களை எழுத்தாளர் ஆர் காளி பிரசாத் பரிந்துரைத்தார். விருது அறிவிப்பிற்கு முன்பே அரசூர் வம்சம் மட்டும் வாசித்திருந்தேன். விருது அறிவிப்பை தொடர்ந்து மற்ற நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்தது. இதோ இன்று அரசூர் நாவல்களில்  கடைசி நாவலாகிய வாழ்ந்து போதீரே நாவலை நிறைவு செய்தேன்.  அரசூர் நாவல்களில் விஸ்வரூபம் நாவலை முதலாவதாக பரிந்துரைப்பேன். அடுத்து நான்காவதாக உள்ள வாழ்ந்து போதீரே நாவல் என் பரிந்துரையில் இருக்கிறது. அப்புறம்தான் மற்ற நாவல்கள் ஆகிய அரசு வம்சம் மற்றும் அச்சுதம் கேசவம் வருகின்றன. இவை என் பரிந்துரைகள். நான்கிலும் தவிர்க்கக் கூடாத ஒன்றை பரிந்துரைக்கச் சொல்பவர்களுக்கு விஸ்வரூபம் படியுங்கள் என்பதே என் பரிந்துரை. பலரும் இதை ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.  திருவிழாவிற்கு கொடியேற்றுவார்கள்.  என்னைப...

துஞ்சுபுலி இடறிய சிதடன்போல

அறிவே துணை என்ற பெயரில் கோவையில் ஓர் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை ஞானி அவர்களின் நண்பரும் பார்வையற்ற பேராசிரியர்களில் முதன்மையான ஆளுமையும் ஆகிய பேராசிரியர் சுகுமாரன் அவர்களின் முன்னெடுப்பு. தொடக்க விழாவுக்கு பேராசிரியர் என்னையும்  அழைத்திருந்தார். நான் மார்ச் 1 வெள்ளிக்கிழமை இரவே கோவை சென்று விட்டேன். நான் தங்கி இருந்த அறைக்கு அடுத்த நாள் காலை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் நண்பர் க.  ஜவகர்  விக்னேஷ் என்றஅவருடைய மாணவருடன் வந்திருந்தார்.   காலை சுமார் 10:30 மணி அளவில் கோவை அரசு கலைக் கல்லூரியில் விழா தொடங்கியது. கோவை விஜயா பதிப்பக  நிருவனர்  ஐயா வேலாயுதம் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஐயா வேலாயுதம் அவர்கள் பேராசிரியர் சுகுமாரன் அவர்களுக்கு எந்த உதவி எப்போது தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக மேடையில் அறிவித்தார். ஆய்வு மைய பெயர்ப்பலகையை ஐயா அவர்கள் திறந்து வைக்க நாங்கள் எல்லோரும் உடன் இருந்தோம்.  ஆய்வு மையத்தின் நோக்கங்களை பேராசிரியர் சுகுமாரன் அவர்கள் சிறப்பாக விளக்கினார். அவருடைய உரை மூன்று பகுதிகளைக...

இவருக்கு எத்தனை கரங்கள்?

நண்பர் பொருநை க .மாரியப்பனுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு அதிகரித்தது. மகாவித்வான் என்ற அவருடைய முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.   அதன் பிறகு படிக்கட்டுகளில் பாய்ந்து ஏறுகிறார்.  தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் சிறுகதைகளை அத்தங்கிமலை என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. இந்தத் தொகுப்புக்கு அருட் செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மகாத்மா பிறந்த நாள் . சென்னையில் நண்பருக்கு பரிசு வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை முடித்து தமிழின் முதன்மையான பதிப்பகம்  ஒன்றின் மூலம் வெளியிடயிருக்கிறார். இன்னொரு மொழிபெயர்ப்பு நாவல் பாதி நிறைவடைந்த நிலையில் இருக்கிறது. சாகித்ய அகாடமிக்காக மற்றொரு   மொழிபெயர்ப்பு சிறுகதைத்  தொகுப்பு வெளிவரவிருக்கிறது. மதுராந்தகம் நரேந்திரா எழுதிய புகழ்பெற்ற நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு முயற்சி வேறொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோக பேராசிரியர் பி .திருப்பதி ராவ் எழுதிய நூல் ஒன்றை தமிழ்ப்படுத்தும் முயற்சி.  (கொஞ்ச...

25

நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. கூப்பிட்டவர் என் தோழி. ஜெ.  சுடர்விழி. சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்.  எதிர்பாராத பொழுதில் அவர் அழைத்திருந்தது ஓர் ஆச்சரியம் என்றால்,  அவர் சொன்ன ஒரு தகவல் இன்னொரு ஆச்சரியம், அல்லது அதிர்ச்சி.  நாங்கள் இளங்கலை முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை  அவர்  சுட்டிக் காட்டினார். உடனே எம்சிசி தமிழ் 95- 98 என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. உடன் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினார்கள். அதன் பிறகு எம் சி சி 95 98 ரியூனியன் என்று இன்னொரு வாட்ஸ் அப் குழு வேறு.  செப்டம்பர் 9 சென்னை கிறித்துவக் கல்லூரியில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கண்டிப்பாக வரத்தான்  வேண்டுமா  என்றிருந்தவனை மிரட்டி வரவழைத்து விட்டார்கள்.  நாங்கள் கேட்டுக்கொள்ள எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுள் சிலர் வருகை தர இசைந்தார்கள்.  82 வயதான பேராசிரியர் தி. இராஜகோபாலன் அவர்கள் நான் தாமதமாக சென...