கொடியேற்றம்

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 21 22 தேதிகளில் கோவையில் நடைபெறுகிறது. இரா. முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இரா முருகன் எழுதிய இராமோஜியம் நாவலை பெருந்தொற்றுக் காலத்தில் வாசித்திருக்கிறேன். 
அரசூர் வம்சம் வரிசை நாவல்களை எழுத்தாளர் ஆர் காளி பிரசாத் பரிந்துரைத்தார். விருது அறிவிப்பிற்கு முன்பே அரசூர் வம்சம் மட்டும் வாசித்திருந்தேன். விருது அறிவிப்பை தொடர்ந்து மற்ற நாவல்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்தது. இதோ இன்று அரசூர் நாவல்களில்  கடைசி நாவலாகிய வாழ்ந்து போதீரே நாவலை நிறைவு செய்தேன். 
அரசூர் நாவல்களில் விஸ்வரூபம் நாவலை முதலாவதாக பரிந்துரைப்பேன். அடுத்து நான்காவதாக உள்ள வாழ்ந்து போதீரே நாவல் என் பரிந்துரையில் இருக்கிறது. அப்புறம்தான் மற்ற நாவல்கள் ஆகிய அரசு வம்சம் மற்றும் அச்சுதம் கேசவம் வருகின்றன. இவை என் பரிந்துரைகள். நான்கிலும் தவிர்க்கக் கூடாத ஒன்றை பரிந்துரைக்கச் சொல்பவர்களுக்கு விஸ்வரூபம் படியுங்கள் என்பதே என் பரிந்துரை. பலரும் இதை ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். 
திருவிழாவிற்கு கொடியேற்றுவார்கள்.
 என்னைப் பொருத்தவரை விஷ்ணுபுரம் விழாவிற்கு இன்று கொடியேற்றம். ஏனென்றால் நான் இன்று இரா முருகனின்  முக்கியமான ஆக்கங்கள் சிலவற்றை  படித்து விழாவிற்கு தயாராகி விட்டேன்.  

Comments

Popular posts from this blog

தலையாலே தான் தருதலால்

நீலி இதழுக்கு நன்றி

மற்றும் ஒரு மைல்கல்!