Posts

Showing posts with the label கிழக்குடுடே

எனக்குப் பிடித்த கிழக்கு டுடே

பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம்சுமார்  10 வருடங்களுக்கு முன்பு ஒலி நூல்களை நிறைய வெளியிட்டது.  மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகம். அதை திரு சால்ஸ் அவ்வளவு அழகாக வாசித்திருப்பார். மதனின் நடை சால்சின் குரல் இரண்டும் சேர்ந்து மொகலாயக் காலகட்டத்திற்கே  நம்மை கூட்டிச்செல்லும்..  என் அப்பா சிலாகித்த புத்தகம் அது. . எனக்கும் என்னைப் போன்ற மற்ற பார்வையற்ற நண்பர்களுக்கும் கேட்கக் கிடைத்தது.  திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த எழுத்தாளர் சா கந்தசாமி  அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. குப்பத்திலிருந்து சென்னை சென்றதும் தம்முடைய சிறுகதை ஒலிப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.  படிப்பது பரவசம், கேட்ப்பது அதைவிட ! என்ற வாசகம் ஒவ்வொரு ஒலிப் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கும்.  இப்படி தனது ஒலிப்புத்தகங்கள் வாயிலாக கிழக்கு பதிப்பகம் அந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்தது.   நிறைய பேர் ஒலிப்புத்தகங்களை சட்டவிரோதமாக பிரதியெடுத்து சுற்றுக்குவிட்ட  காரணத்தினால் தொடர்ந்து  இந்தமுயற்சி ...