Posts

Showing posts from June, 2026

ஹய்ய

சென்னையிலிருந்து மைசூர் பயணம். சதாப்தி எக்ஸ்பிரஸில் 22 ஜூன் 2026 அன்று சென்றேன். காலைச் சிற்றுண்டி, காப்பி எல்லாவற்றிற்கும் சேர்த்தே முன்பதிவு செய்துவிட்டோம்.  எங்களுக்கு  இது போன்ற சற்று வசதியான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் நடைமுறை சார்ந்து சில நெருக்கடிகள் இருக்கின்றன.              அவர்கள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைச் சரியாகப் பிரிக்க வேண்டும். பக்கத்து இருக்கையில்  உட்கார்ந்திருப்பவர் மீது பட்டுவிடக்கூடாது.. கஷ்டம் தான். இதன் காரணமாகவே பெரும்பாலான பயணங்களில் எதுவும் சாப்பிடுவதில்லை.            மைசூர் பயணத்தின் போது ஒரு பையன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். நீங்கள் எதுவரை போகிறீர்கள் அங்கிள் என்று கேட்டான். நான் புரிந்து கொண்டு உங்களுக்கு ஜன்னல் இருக்கை வேண்டுமா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னவுடன் கொடுத்துவிட்டேன். காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு பெங்களூர் ரயில் நிலையம் வரும். என்னைக் கொஞ்சம் எழுப்பி விட முடியுமா அங்கிள் என்று கேட்டான். சரி என்று சொல்லி அலாரம் வைத்துக் கொண்டேன்.  எ...

அசைவறு மதி

பழனிக்குமார் எழுதும் சுய முன்னேற்றத் தொடர் உயிர்மை  இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அசைவருமதி என்று பெயர்.  ஏப்ரல் 25 2026 அன்று நான் வாசித்தபோது 17 கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பழனிக் குமார் அறிவுரை மழை பொழியாமலும் வாசகர்களைச் சிரிக்க வைக்கிறோம் என்று அசட்டுத்தனம் காட்டாமலும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.        ஓர் எடுத்துக்காட்டு.        ஓர் செயலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். முதல் நாளில் உற்சாகமாக ஆரம்பித்தோம். நம்முடைய உற்சாகம் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடுகிறது. நம்முடைய முதல் நாள் உற்சாகத்தை மறுபடியும் எவ்வாறு திரும்பப் பெறுவது? பழனிக் குமார் விளக்குகிறார்.      நம்முடைய வாழ்வில்  நாம் ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கும் போது குழந்தை நிலை, மத்திய வயது நிலை, முதுமை நிலை, நிபுணத்துவ நிலை  இவற்றில் ஒரு நிலையில் அமைகிறோம் என்கிறார் பழனிக் குமார். குழந்தை நிலையில் ஒரு செயலைச்  செய்யும் போது நம்மிடம் அச்சமும் படபடப்பும் இருக்கின்றன. ஆனால் அவற்றை விடவும் செயலை சிறப்பாக மேற்...

கவிதை எழுதச் சொல்லும் ஜான் சுந்தரின் கவிதைகள்

        இலக்கியம் வாசிப்பதன் பயனாக அழகியல் அனுபவம் கிடைக்கலாம், ஆன்மீகப் பிரக்ஞை மேம்படலாம். இவற்றுடன் எழுத வேண்டும் என்ற அகத்தூண்டுதல்களையும் இலக்கிய படைப்புகள் சில நேரம் வழங்கவும் செய்யலாம். இவ்வாறு அகத் தூண்டல்களை வழங்கும் கவிதைகளை எழுதக்கூடியவர் ஜான் சுந்தர்‌          பொதுவாகவே அகம் நோக்கி அதிகம் பேசும் நம்முடைய பெரும்பாலான கவிதைகள் இடையே இவருடைய படைப்புகள் புறம் நோக்கிப் பேசுபவை. .  இசை, இளங்கோ கிருஷ்ணன் இவர்களின் கவிதைகளில் இடம்பெறும் புற உலக காட்சிகள் தான் ஜான் சுந்தர் கவிதைகளிலும் இடம்பெறுகின்றன.            ரவிக்கைச் சுகந்தம் என்னும் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.     ஏ டி எம் வளாகத்தைக் காவல் காப்பவர், பெயிண்ட் அடிப்பவர், என கீழ் நடுத்தர மக்களின் பாடுகளை எழுதுகிறார். கவிதைகளில்  உணர்ச்சியை மீட்டும் இவருடைய முயற்சிகள் பிரான்சிஸ் கிருபாவையும் ஞாபகப்படுத்துகின்றன.‌ ஓர் எடுத்துக்காட்டு.     ஏதிலிகளின் ஆண்டவரே     உமது ஜெபக்...

முப்பத்தாறு ரத்தினங்கள்

மதிப்பிற்குரிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கிழக்கு டுடே இதழில் முப்பத்தாறு ரத்தினங்கள் என்ற பெயரில் தொடர் எழுதுகிறார்கள். முதன்மையான நாவல்களை அறிமுகப்படுத்தி அவற்றின் கலைப் பெறுமதியை  ஆராயும் தொடர். . எஸ் வி வி , அனுத்தம்மா என 50களில் செயல்பட்ட எழுத்தாளர்களின் முதன்மை படைப்புகள், அவர்களின் இலக்கியச் சாதனைகள் என கட்டுரைகள் அமைந்துள்ளன. முதன்மையான ஒன்றை நுட்பமாகச் சொல்லிவிட்டு முதன்மையற்றவற்றை மௌனமாகக் கடந்து விடுவது எழுத்தாளர் எஸ் வி வி அவர்களின் இயல்பாக உள்ளது. அவ்வாறே கதை மாந்தர்கள் மீது உளவியல் வெளிச்சத்தைப் பாய்ச்சாமல் கதைச்சூழலைப்  புரியவைக்க  உளவியலின் ஒளியைப் பயன்படுத்துவது அனுத்தமா அவர்களின் கலைத் திறனில் மிளிர்கிறது. இத்தகைய கட்டுரைகளின் பெரும் பயன் என்பது இவை நாம் அறியாதவாறு நம்முடைய ரசனைத் திறனை மேம்படுத்தி விடும் என்பது தான் . நண்பர்களுக்குப்  பரிந்துரைக்கிறேன்.