Posts

Showing posts with the label அனுபவம்

ஹய்ய

சென்னையிலிருந்து மைசூர் பயணம். சதாப்தி எக்ஸ்பிரஸில் 22 ஜூன் 2026 அன்று சென்றேன். காலைச் சிற்றுண்டி, காப்பி எல்லாவற்றிற்கும் சேர்த்தே முன்பதிவு செய்துவிட்டோம்.  எங்களுக்கு  இது போன்ற சற்று வசதியான பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதிலும் நடைமுறை சார்ந்து சில நெருக்கடிகள் இருக்கின்றன.              அவர்கள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களைச் சரியாகப் பிரிக்க வேண்டும். பக்கத்து இருக்கையில்  உட்கார்ந்திருப்பவர் மீது பட்டுவிடக்கூடாது.. கஷ்டம் தான். இதன் காரணமாகவே பெரும்பாலான பயணங்களில் எதுவும் சாப்பிடுவதில்லை.            மைசூர் பயணத்தின் போது ஒரு பையன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். நீங்கள் எதுவரை போகிறீர்கள் அங்கிள் என்று கேட்டான். நான் புரிந்து கொண்டு உங்களுக்கு ஜன்னல் இருக்கை வேண்டுமா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னவுடன் கொடுத்துவிட்டேன். காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு பெங்களூர் ரயில் நிலையம் வரும். என்னைக் கொஞ்சம் எழுப்பி விட முடியுமா அங்கிள் என்று கேட்டான். சரி என்று சொல்லி அலாரம் வைத்துக் கொண்டேன்.  எ...

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

பல்கலைக்கழகத்தில் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் இருந்து என்னுடைய நூல்களை கொண்டு வந்து மாணவர்கள் அடுக்கி வைத்தார்கள். என்னுடைய அறையில் இடம் இல்லை என்பதால் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் ஒரு பீரோ நிறைய என்னுடைய நூல்களை வைத்திருந்தேன். இன்று ஜனவரி 24, 2026 காலை 10 மணி முதல் இந்த வேலைதான். நூல்கள் அடுக்கப்படும்போது  சிலவற்றை எடுத்து தலைப்பைவாசிக்கவைத்துக் கேட்டேன். ஏதேதோ நினைவுகள்.            என்னுடைய அப்பா எனக்காக வங்கியில் ஆர் டி போட்டு புத்தக கண்காட்சிக்கு பணம் கொடுக்கும் ஞாபகம், புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகு அம்மா புத்தகங்களில் என் பெயரையும் வாங்கப்பட்டதேதியையும் எழுதி வைக்கும் திருவிழா ஞாபகம் அபிதான சிந்தாமணி வீட்டிற்கு வந்த ஞாபகம், பகவத் கீதையின் முதன்மையான உரைகளை விஸ்வநாதன் சார் வாசிக்க எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து கொடுத்த ஞாபகம்.  மாணவர்கள் சில புத்தகங்களை ஆசையுடன் கேட்டு எடுத்துச் சென்றார்கள்.            நாலாயிரத் திவ்ய பிரபந்த நூல் தொகுதியில் ஒரே ஒரு நூல் மட்டும் எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட...

ஓர் உரை ஒரு கட்டுரை

நம்முடைய துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் புதன் வட்ட நிகழ்வில் இன்று 20 நவம்பர் 2025 அன்று யு. ஆர். அனந்த மூர்த்தியின் 'திவ்யா' நவீனத்துவத்திற்கும் அப்பால் என்னும் பொருளில் இன்று உரையாற்றினேன். பொதுவாக புதன்கிழமை தோறும் நடைபெறுவதால் நிகழ்வின் பெயர் புதன் வட்டம்.  முழு கட்டுரையும் கையில் இருந்தது.‌ தொடர்ந்து மாணவர்கள் சிறப்பான விவாதத்தை முன்னெடுத்தார்கள். அனந்த மூர்த்தி, சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் குறித்தெல்லாம் விவாதம் நிகழ்ந்தது.  மிகவும் நிறைவான இனிமையான நாள் இது! 

ஒரு நாடகம் மறுபடியும் நிகழ்கிறது

2006 அல்லது 2007 ஆக இருக்கலாம்  குப்பத்தில்  ஒரு முடி திருத்தும் கடைக்குச்  சென்றிருந்தேன். குப்பம் போன்ற சிறிய ஊர்களில் ஒருவருக்கு உபயோகித்த பிளேடையே  இன்னொருவருக்கும் உபயோகிப்பதாக ஒரு புகார்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு.  கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடையில் இருந்தார். அவர்தான் எனக்கு வேண்டியதைச் செய்தார்.   அவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் வந்திருந்த ஞாபகத்தில் விசாரித்தேன். அவரும் எனக்குப் பிடித்த கன்னட பாடலை ஞாபகம் வைத்திருந்து ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தார். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். 10 நிமிடங்கள் கழிவதற்குள் நான் வாங்கி வந்தும் பிரிக்கப்படாத பிளேடை சுட்டிக்காட்டி நான் பதற்றத்துடன் கேட்டபோது அவர் புதிதாக அடுக்கப்பட்டு இருந்த பிளேடு பொட்டலத்தை எடுத்து என் கைமீது அழுத்தினார். அவர் வேகமாக அழுத்தினார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன! அப்போது பத்மநாபனும் கிருஷ்ணமூர்த்தியும் அங்கில்லை.  2025 நவம்பர்  14.    பார்வையற்ற நிலையில் தன்னந்தனியே சாலையில் நடந்து செல்லும் என்னையும் ஜோதியையும் பார்க்கப் பெருமையாய் இருக்கிறது என்ற...

அந்தக் கரம் அந்த மனம்

ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும்  போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால்  ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது.  பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன்   பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன்.  எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது  அம்மாவின் பார்வையிலிருந்து   தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள்.  பட்டாசு ...

ஒரு யோகியின் பாதத்தில்

யோகம் சார்ந்த அறிமுக கட்டுரைகளை குறிப்புகளை எழுதலாம் என்று வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இவை விவாதிப்பதற்காக அல்ல. வெறும் அனுபவப் பகிர்தல்கள். இன்னும் சொல்லப்போனால் இவை என்னுடைய அனுபவங்கள். இவை இந்த வினாடியில் உண்மையானவை என்பதன்றி இவற்றிற்கு பெரிய அளவிலான எந்த மதிப்பையும்  நான் வலியுறுத்தவில்லை. என்னை தம் மாணவனாக ஏற்றுக்கொண்டு யோகத்தை அருளிச்செய்த குருஜி சௌந்தர் அவர்களின் திருவடிகளுக்கு என் வணக்கங்கள். யோகம் சார்ந்த என்னுடைய சில புரிதல்களும் அனுபவங்களும் இனி குறுங்கட்டுரைகளாக இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறும். மற்ற மாணவர்கள் யோகத்தில் நம்பிக்கை கொள்வார்கள் என்றால் இந்த கட்டுரைகள் தம் நோக்கத்தை அடைந்து விட்டன என்றே பொருள். 

தித்திக்கும் தருணங்கள்

ஆசிரியர் தீ . ந.  ஸ்ரீ கண்டய்யா அவர்களின் "பாரதிய காவ்ய மீமாம்சே"   நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு குருகு இதழில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் ஏழாம் தேதி ஏழாவது அத்தியாயம் வெளி வந்திருக்கிறது. இந்த அத்தியாயத்துடன் மூன்று பகுதிகள் கொண்ட நூலில் முதற் பகுதி நிறைவடைகிறது. அவையடக்கமெல்லாம் கிடையாது, உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த நூலை நான் மொழிபெயர்க்கவில்லை, இந்த நூல் என் மூலமாக தன்னை தமிழில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதுதான் பொருத்தமானது.  உண்மையிலேயே இது ஒரு முக்கியமான பங்களிப்புதான். இதுவரை வெளிவந்துள்ள ஏழு அத்தியாயங்களை மட்டுமே கூட தொகுத்து, விரும்பினால் சிறிது "எடிட்"  செய்து நூலாக வெளியிடலாம்.  என் ஆசிரியர்களின் அருளால் இந்தப் பணி நடைபெறுகிறது. என் மாணவர்களின் அன்பால் நண்பர்களின் உடனிருப்பால் ஒரு கனவு நனவாகிறது.  குருகு நண்பர்கள் அபினாசி தாமரைக்கண்ணன், புதுவை தாமரைக்கண்ணன், அனங்கன் ஆகியோருடன் இந்தப் பணி தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறேன். எனக்கு இருந்த அகத்தடைகளை நான் கடப்பதற்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். நெருக்கட...

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

இலக்கியம் என்னவெல்லாம் கொடுக்கும், ஓர் உடம்பில் இருந்து கொண்டு ஓர் ஆயிரம்  வாழ்க்கையை வாழும் வாய்ப்பை!  அப்புறம் சில இனிய நினைவுகளை எப்போதும் நிறைவளிக்கும் உறவுகளை இவ்வாறு இலக்கியம் கொடுப்பவை அநேகம். .  நண்பர் சாகுல் ஹமீதிடம் அப்துல் வகாப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். பரமக்குடியில் மேலை முஸ்லிம் ஹைராப்த்துல் அலியா நடுநிலைப் பள்ளியில் 1988 89 ஆம் கல்வியாண்டில்  வகாபும் நானும்  ஆறாம் வகுப்பு படித்தோம். பார்வையற்ற மாணவன் என்பதால் என்னை வகுப்பில் முதல் வரிசையில் முதலில் உட்கார வைத்திருப்பார்கள். என்னுடன் வகாப் உட்கார்ந்திருப்பான். தாமஸ் யூரிக் காதரின் என்னும் மற்றொரு பையன் எங்களுடன் இருப்பான். முகமது அபுபக்கர், காத்தய்யா. மும்தாஜ் டீச்சர் வீட்டிற்கு எங்கள் அட்டையில் ரேஷன் வாங்கிக் கொண்டு போவேன். பணத்தை எண்ணி எண்ணி என் சட்டையில் வைத்துவிட்டு   அது எங்கும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு குண்டூசியையும் டீச்சர் குத்தி விடுவார்.   ரிக்க்ஷாகாரர் வராத நாட்களில் என்னை வீட்டிற்கு கொண்டு வந்து விடும் பொறுப்பை வகாப் ஏற்றுக் கொள்வான்‌  இஸ்லாமியப் ப...

நேற்று கிடைத்த அரு மணி

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி கதைகள் என்ற ஒரு சிறுகதை தொகுப்பைப் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்திருக்கிறேன். வாங்கியதாகவும் நினைவு. ஆனால் இப்போது நூல் கையில் இல்லை. குற்றமும் தண்டனையும் நாவலை படித்து கண்ணீர் விட்ட ஓர் இளம்  வாசகி பற்றி  ஆசிரியர் ஜெயமோகன் தம் இணையதளத்தில் எழுதி இருந்தார். அந்த இளம் வாசகி தற்போது எழுத்தாளர் அருண்மொழி நங்கை என்று அறியப்படுகிறார். ஓர் ரஷ்ய இலக்கிய மேதையின் படைப்பை வாசித்து தமிழ் மனம் கண்ணீர் விடுவது என்றால் அது எப்படிப்பட்டது?  அந்த அனுபவத்தைப் பெறாமல் நான் என்ன தமிழ் மாணவன்? உலகெங்கிலும் உள்ள இலக்கிய வாசகர்களிடம் டால்ஸ்டாய் கட்சி தஸ்தயெவ்ஸ்கி  கட்சி என்று இரு பிரிவுகள். அவருடைய மூன்று நாவல்களிலும் இவருடைய மூன்று நாவல்களிலும் ஆகச் சிறந்தவை எவை என்று ஓயாத விவாதங்கள். நீ எந்த தரப்பு. உன் நிலைப்பாடு என்ன? எல்லாவற்றையும் படித்துவிட்டு வா அப்புறம் பேசலாம் என்று எழுத்தாளர் இரா‌. இராமன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது அப்படியே எஞ்சி இருக்கிறது.  காவியம்  நாவல் முடிவடைந்ததும் மனம் ஒரு பெரும் படைப்பையே எதிர்ப...

பண்ணைக்கு ஒருவன்

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு கவிஞர் விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது. ஜூன் 8 அன்று கவிக்கோ மன்றத்தில் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கன்னட எழுத்தாளர்  வசுதேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நடத்தும் சந்தா‌ புஸ்த்தகா‌ என்ற பதிப்பகத்தின் சார்பில் ஆசிரியர் ஜெயமோகனின் ஏழாம் உலகம்  நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. கன்னட எழுத்தாளர் சாந்தி கே அப்பண்ணா நாவலை தலாதளா என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.  ஏழாம் உலகம் நாவலை இரண்டு முறை படித்திருக்கிறேன். இப்போது கன்னடத்தில் படிக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நாவலின் ஒவ்வொரு பகுதி புதிய திறப்பை முன் வைக்கிறது. எருக்குவிற்கும் சீண்டன்  நாயருக்கும்‌ இருக்கும் பந்தம் இந்த முறை! ஒரு துளி அன்பே அன்றி நமக்கு வேண்டியது வேறு என்ன!  நாவலை வெளியிடும் பேறு எனக்கு அமைந்தது!  அது ஆசிரியரின் கனிவும் நண்பர்களின் அன்பும் அன்றி வேறென்ன!  இந்தத் தருணத்தில் ஒன்று சொல்லிக் கொள்வேன்  நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!  நான் தகுதிப் படுத்திக் கொள்கிறேன்!  கடல் கடந்து வந்த...

ஒரு பேரலை

2024 விஷ்ணுபுரம் விழாவிற்காக சில மாதங்களாகவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பல நூல்கள்  விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் முன்பு தான் கிடைத்தன.   எப்படியோ கையில் இருந்த நூல்களை எல்லாம் படித்து விட்டேன் ‌ அவ்வாறு படித்துவிட்டு விழாவிற்கு சென்றது நிறைவாக இருந்தது.  டிசம்பர் 16 முதல் 20 வரை படித்த நூல்கள்  துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிராஜா  100 ரூபில்கள் மயிலன் ஜி சின்னப்பன்  பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி சின்னப்பன்  மண்டோவின் காதலிகள் லாவண்யா சுந்தர்ராஜன் ஆரண்யம்  கயல்  ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கயல்  பொற்பனையான் சித்திரன்  ஒரு பேரலையில் சறுக்கி விளையாடக் கிடைத்த ஒரு வாரம். 

காக்கை குருவி எங்கள் ஜாதி

இன்று மாலை அது நடந்தது. வீட்டு வாசல் படித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது மிகவும் சாதுவான நாய் . யாராவது புதியவர் வந்துவிட்டால் குறைத்துக் கொண்டே பயந்தபடி பின்னால் செல்லும் அளவுக்குச் சாதுவான நாய் தான்.  நாங்கள் அறிந்து  அது எந்த அத்துமீறலிலும் நடந்தது கிடையாது. அப்படி இருக்க ஒரு சேவலை கவ்விப் பிடித்துவிட்டது.   வீட்டு வாசலில்  வண்டியில் வளையல் விற்றுக் கொண்டிருந்தவர் வந்து விலக்கி விட்டார். பக்கத்து வீட்டுப் பையனும் நாயிடமிருந்து சேவலை விலக்கி விட உதவினான். பயந்து போய் வீட்டுக்கு  எதிரில் உள்ள ஒரு புதரில் சேவல் ஒளிந்து கொண்டு விட்டது. கொஞ்ச நேரம் கழித்து அதன் உரிமையாளர்கள் வந்து  தூக்கிக் கொண்டு சென்றார்கள். அப்போது சேவல் பலமாகக் கூவியது.  மூன்று சத்தங்கள்.  நாய் சேவலைக் கவ்வியத் தருணத்தில் சுமார் 25 காக்கைகள் ஒன்று சேர்ந்து சத்தமிடத் துவங்கிவிட்டன. ஓயவே இல்லை.  சிறிது நேரம் கழித்து சத்தம் இன்னும் அதிகரித்தது. கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் காக்கைச் சத்தம்.  இப்படி மூன்று முறை காக்கைகளின் உச்சகட்ட ஒலி.  முதல் முறை ...

ஓர் சுந்தர உரை

சுந்தர காண்டம் குறித்த நண்பர் ஜா ராஜகோபாலன் அவர்களின் உரை இப்போதே நிறைவு பெற்றது. விரிவான தத்துவப்  பின் புலனிலிருந்து சுந்தர காண்டத்தை அணுகிய உரை.  தொடர்ந்து யோசிக்க திறப்புகள் பல உரையில் வந்து கொண்டே இருந்தன.  அனுமனைத்  தடுக்கும், மைநாகம், சுரசை, அங்காரதாரை ஆகியோரை ஆணவம், கன்மம்  மற்றும் மாயையின் இயல்புகளுடன் பொருத்திக் காட்டிய இடம் பிரமாதம்!  ஓர் வில்லியின் தூதன் என்று அனுமன் கூறுவதில் உள்ள நுட்பம் என் வாசிப்பில் அகப்படாத ஒன்று. இன்று திரு. ஜா. ஜா அவர்களால் அகழ்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது நிகழ்வை சாத்தியமாக்கிய இம்பர்வாரி நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு! .  இதோ புதிய ஆண்டு பிறந்திருக்கிறது, இந்த ஆண்டு சுந்தர காண்டம் குறித்த இனிய நினைவுகளுடன் தொடங்கி இருக்கிறது. இன்னும் இன்னும் நிறைய பரிசுகளை இது கொண்டு வரவிருக்கிறது என்பதற்கு இந்த நிமித்தமே சான்று.  நள்ளிரவு சுமார் 12 மணி 15 நிமிடங்களில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.  இன்னும் பிறவாத தலைமுறை நானும் வாழ்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக மட்டுமல்ல, ஐயமும் மனச்சோர்வும் ...

அஞ்சலி- மருத்துவர் மகாதேவன்

புகழ்ப்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மகாதேவன் அவர்கள் காலமான செய்தி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. மருத்துவர் மகாதேவன் குறித்த அறிமுகம் எனக்கு பல நிலைகளில் அமைந்தது  . அஜீரணம் சார்ந்த என்னுடைய உடல் உபாதைக்கு பல இடங்களில் சிகிழ்ச்சை பெற்றுக் கொண்டிருந்தேன். மயிலாப்பூரில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு ஒரு பிற்பகல் பொழுதில் சென்றிருந்தபோது என்னுடைய நாடியை பரிசோதித்து விட்டு தைராய்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏதோ ஒரு தொன்மையான மருத்துவ நூலில் இருந்து மேற்கோளை உரைத்து தம்மைச் சூழ்ந்திருந்த மாணவர்களிடம் என் உடல் நிலை குறித்து விளக்கினார். இது முதல் சந்திப்பு.  சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு சில வகை மருந்துப்பொடிகளை‌ வழங்கினார். அவர் கூறிய வண்ணம் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தத் தான் என்னால் இயலவில்லை.  என்னுடைய நண்பர்  முதுகுத்தோலில் ஒரு வகை புற்றுநோய். அவருக்காக மருத்துவரைச் சந்திக்க தரிசனம் கோப்பு சென்றிருந்தோம்.  சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளி சமுதாயத்தி...

யுகாதிப் பரிசுகள்

இன்று தெலுங்குப் புத்தாண்டு நாள். குப்பம் செல்வதற்கு முன்பும் வீட்டில் இந்த நாள் கொண்டாடப்படுவதுண்டு என்றாலும் ஆந்திராவுக்குச் சென்று குடியேறிய பிறகு இந்த நாளுடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டு விட்டது. காரணம் மனதுக்கு நெருக்கமான பல நண்பர்கள் இந்த நாளை மிகவும் உற்சாகமாக எதிர்கொள்வார்கள் என்பதுதான். தெலுங்குப் பண்பாட்டை, இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இந்த நாள் இன்னும் பிடித்துப் போய்விட்டது. இதோ என் அன்பிற்குரிய கன்னட நண்பர்களுக்கும் தெலுங்கு நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச்  சொல்ல வேண்டும்.   இந்த நாள் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு அல்புனைவு நூல்களுடன் மலர்ந்திருக்கிறது. கதா விலாசம், துணை எழுத்து, எனது இந்தியா, தேசாந்திரி ஆகிய புத்தகங்களுடன் இந்தப்‌புத்தாண்டை  வரவேற்கிறேன். எல்லா மங்களத்துடனும் புத்தாண்டு வருக! ஆம்! அவ்வாறே  நிகழும் என்பதற்கு இந்த நூல் மங்கலமே சான்று!  என் கன்னட நண்பர்களை இப்படி வாழ்த்துகிறேன்  ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯಗಳು

துஞ்சுபுலி இடறிய சிதடன்போல

அறிவே துணை என்ற பெயரில் கோவையில் ஓர் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை ஞானி அவர்களின் நண்பரும் பார்வையற்ற பேராசிரியர்களில் முதன்மையான ஆளுமையும் ஆகிய பேராசிரியர் சுகுமாரன் அவர்களின் முன்னெடுப்பு. தொடக்க விழாவுக்கு பேராசிரியர் என்னையும்  அழைத்திருந்தார். நான் மார்ச் 1 வெள்ளிக்கிழமை இரவே கோவை சென்று விட்டேன். நான் தங்கி இருந்த அறைக்கு அடுத்த நாள் காலை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பேராசிரியர் நண்பர் க.  ஜவகர்  விக்னேஷ் என்றஅவருடைய மாணவருடன் வந்திருந்தார்.   காலை சுமார் 10:30 மணி அளவில் கோவை அரசு கலைக் கல்லூரியில் விழா தொடங்கியது. கோவை விஜயா பதிப்பக  நிருவனர்  ஐயா வேலாயுதம் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஐயா வேலாயுதம் அவர்கள் பேராசிரியர் சுகுமாரன் அவர்களுக்கு எந்த உதவி எப்போது தேவைப்பட்டாலும் செய்யத் தயாராக இருப்பதாக மேடையில் அறிவித்தார். ஆய்வு மைய பெயர்ப்பலகையை ஐயா அவர்கள் திறந்து வைக்க நாங்கள் எல்லோரும் உடன் இருந்தோம்.  ஆய்வு மையத்தின் நோக்கங்களை பேராசிரியர் சுகுமாரன் அவர்கள் சிறப்பாக விளக்கினார். அவருடைய உரை மூன்று பகுதிகளைக...

இன்றுடன் நிறைவு

நாங்கள் முன்னெடுக்கும் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியான சுந்தரகாண்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி சில நாட்களில் காண்டத்தின் கருத்துகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொள்ளும் உரையாடல்கள் தொடங்கும்.  இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! 

நானும் ஒரு சார்பு நூல் ஆசிரியன்

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் சிங்கப்பூரில் வழங்கிய உரைகளை எழுத்தாளர் பரிமித்தா தொடர்ந்து  அவருடைய வலைப்பக்கத்தில் ஆவணப்படுத்தி வருகிறார்.  https://parimitaa.blogspot.com/2024/02/6.html சுனில் அவர்களின் கருத்துக்களை தொகுத்து சூரிய மண்டலத்திற்கும் நவீன தமிழ் இலக்கியச் சூழலுக்கும்  உள்ள ஒப்புமைகளை விளக்கி அண்மையில் பரிமித்தா எழுதியிருந்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கோணத்தில் தமிழ் மரபிலக்கியத்தையும் விளக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இன்று மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.  இதற்காக நான் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கும் பரிமித்தாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.  வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவன் கண்டதே முதல் நூல் என்று தமிழ் மரபு சொல்கிறது.  தூய அறிவின் விளைவால் குற்றமின்றி பிறப்பதே முதல் நூல். அந்த முதல் நூலை விளக்கவும் விரித்தெடுக்கவும் மற்ற நூல்கள் முயலலாம். அவ்வாறு முயலும் நூல்களுக்கு வழிநூல் என்று பெயர். வழி நூலை விளக்கும் வண்ணமும் நூல்கள் பிறக்கலாம். அப்படிப்பட்ட நூல்களுக்கு சார்பு...

சாத்தானே அப்பாலே போ!

எதையாவது தேட வேண்டும் என்ற நிலையில் கூகுள் குரோம் என்ற பிரவுசரை திறந்து அதில் செய்திகளை உள்ளிட்டு தேடும் வழக்கத்தை பின்பற்றிவந்தேன். நம்முடைய அலைபேசியின் முகப்புத் திரையை இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் நோக்கி  விரல்களால் தள்ள இணையம் திறந்து கொள்ளும் என்பது எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியாமல் இருந்தது. நான்  வாசிப்பிற்கு அலைபேசியில் உள்ள மின்னணு செயலிகள் மற்றும் இணையத்தையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருப்பதால் என்னுடைய நேரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.  எனக்குக் கொஞ்சம் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. இணையத்தில் வரும்  விளையாட்டு தொடர்பான செய்திகளை வாசிப்பது மற்ற எதிர்மறை உணர்வுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்பதும்கூட கிரிக்கெட் செய்திகளை நான் அதிகம் வாசிக்கக் காரணம்.  ஆனால் இப்போது அதில் தான் பிரச்சனை.  கிரிக்கெட் செய்திகள் என்ற பெயரில் வெற்று வதந்திகள், எதிர்மறை கருத்துக்கள். இப்போது என் அலைபேசி முகப்புத்திரை ஒரு மின்னணு குப்பைத் தொட்டி என்பதாக இருக்கிறது. எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் சிறிதும் எதிர்பா...

தலையாலே தான் தருதலால்

இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் பக்கத்திலிருக்க ஒரு தென்னங்கன்றை நட்டு வைக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. வாழ்வில் முதல் முறையாக ஒரு தென்னம்பிள்ளையை கையில் ஏந்தினேன். மாணவர் பாரதிராஜா ஈரோடிலிருந்து கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்திற்கு ஒரு பரிசை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. மிகவும் நிறைவான நிமிடங்கள்.  பாரதிராஜா நம்முடைய பல்கலைக்கழகத்தில் முதுகலை பயில்கிறார், பல்கலைக்கழக புதிய சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி சேர்ந்த சில நாட்களிலேயே திரும்பிச் சென்று விட்டார். அவர் திரும்பி வந்துவிட்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் சில மாணவர்களின் உடன் இருப்பே போதும்!  பாரதி அதிகம் பேச மாட்டார். ஆனால் நன்றாக ஓவியம் வரைவார். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் வாராந்திர கருத்தரங்கில் ஒரு முறை தன்னுடைய  ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்.   கல்வி முடித்துச் செல்லும்போது ஒரு நினைவை பல்கலைக்கழகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்று பாரதிராஜாவுக்குத்  தோன்றியிருக்கிறது.  மூன்றாம் வகுப்பில் இந்த வெண்பா பாடம...