ஒரு யோகியின் பாதத்தில்
யோகம் சார்ந்த அறிமுக கட்டுரைகளை குறிப்புகளை எழுதலாம் என்று வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இவை விவாதிப்பதற்காக அல்ல. வெறும் அனுபவப் பகிர்தல்கள். இன்னும் சொல்லப்போனால் இவை என்னுடைய அனுபவங்கள். இவை இந்த வினாடியில் உண்மையானவை என்பதன்றி இவற்றிற்கு பெரிய அளவிலான எந்த மதிப்பையும் நான் வலியுறுத்தவில்லை. என்னை தம் மாணவனாக ஏற்றுக்கொண்டு யோகத்தை அருளிச்செய்த குருஜி சௌந்தர் அவர்களின் திருவடிகளுக்கு என் வணக்கங்கள். யோகம் சார்ந்த என்னுடைய சில புரிதல்களும் அனுபவங்களும் இனி குறுங்கட்டுரைகளாக இந்த வலைப் பக்கத்தில் இடம்பெறும். மற்ற மாணவர்கள் யோகத்தில் நம்பிக்கை கொள்வார்கள் என்றால் இந்த கட்டுரைகள் தம் நோக்கத்தை அடைந்து விட்டன என்றே பொருள்.
Comments
Post a Comment