Posts

Showing posts with the label இணைய இதழ்

சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம்.  இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது.           அருஞ்சொ...

இப்படி செய்திருக்க வேண்டாமே சமஸ்

அருஞ்சொல் இதழ் இனிமேல் வெளிவராது என்று அதன் நிறுவனர் சமஸ் கூறிவிட்டார். ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரை என்று அருஞ்சொல் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது நான் பெரும்பாலும் அந்த கட்டுரையை கவனிப்பதுண்டு. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதும் பொருளியல் சார்ந்த கட்டுரைகள், யோகேந்திர யாதவ், ராமச்சந்திர குகா ஆகியோரின் அரசியல் கட்டுரைகள் இவற்றை தவறவிடுவதில்லை.  அருஞ்சொல்லுக்கு தெளிவான ஒரு அரசியல் இருந்தது. அது வலதுசாரிஅ ரசியலுக்கு எதிரான ஒன்று என்பதாக வகுத்துக் கொள்கிறேன்.  மோதி தலைமையிலான அரசு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் சொன்னபோது  அடித்துச் சொல்கிறேன், பா. ஜ. க 300 இடங்கள் ஜெயிக்காது என்று சமஸ் எழுதினார். அவரின் சொற்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அது ஒரு ஆறுதலாக இருந்தது.  அதற்காக காங்கிரஸ் மீது அருஞ்சொல். விமர்சனங்களை வைக்காமலும் இல்லை. அண்மையில் நடந்த ஹரியானா தேர்தலை காங்கிரஸ் சரியாக கையாளவில்லை என்ற கட்டுரையை சான்றாக சொல்லலாம்.  மூன்று மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறை நிறுவனத்தில் தாம் ஏற்றுக் கொண்ட பொறுப்பு காரணமாக அருஞ்சொல் ஆச...

எனக்குப் பிடித்த கிழக்கு டுடே

பத்ரி சேஷாத்ரியின் கிழக்கு பதிப்பகம்சுமார்  10 வருடங்களுக்கு முன்பு ஒலி நூல்களை நிறைய வெளியிட்டது.  மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகம். அதை திரு சால்ஸ் அவ்வளவு அழகாக வாசித்திருப்பார். மதனின் நடை சால்சின் குரல் இரண்டும் சேர்ந்து மொகலாயக் காலகட்டத்திற்கே  நம்மை கூட்டிச்செல்லும்..  என் அப்பா சிலாகித்த புத்தகம் அது. . எனக்கும் என்னைப் போன்ற மற்ற பார்வையற்ற நண்பர்களுக்கும் கேட்கக் கிடைத்தது.  திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த எழுத்தாளர் சா கந்தசாமி  அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது. குப்பத்திலிருந்து சென்னை சென்றதும் தம்முடைய சிறுகதை ஒலிப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.  படிப்பது பரவசம், கேட்ப்பது அதைவிட ! என்ற வாசகம் ஒவ்வொரு ஒலிப் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கும்.  இப்படி தனது ஒலிப்புத்தகங்கள் வாயிலாக கிழக்கு பதிப்பகம் அந்தக் காலகட்டத்தில் ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்தது.   நிறைய பேர் ஒலிப்புத்தகங்களை சட்டவிரோதமாக பிரதியெடுத்து சுற்றுக்குவிட்ட  காரணத்தினால் தொடர்ந்து  இந்தமுயற்சி ...

அறிவுவானில் ஓர் அழகிய குருகு

நான் விரும்பி வாசிக்கும் இணைய இதழ்களில் குருகு இணைய இதழும் ஒன்று. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குருகு இணைய இதழில் இரண்டு முக்கியமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் எழுதியுள்ள  மனம் குறித்த கட்டுரையை திரு ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவ்வாறே குரு நித்ய சைதன்ய யதி  கட்டுரையை இந்திய உளவியல் என்ற பெயரில்  நண்பர் அழகிய மணவாளன் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்.  தொடங்கிய நாள் முதல் குருகு இதழ் மிகத் தீவிரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கலை, தத்துவம் உள்ளிட்டத் துறைகளில் வெளிவரும் குருகு இதழின்  கட்டுரைகள் நமது ஆய்வுகளிலும் சிந்தனைகளிலும் பல புதிய திறப்புகள் ஏற்பட நிச்சயம் வழிவகுக்கும். இன்னும் பத்து வருடங்களில் இதழின் பங்களிப்பு தமிழின் அறிவுச் சமூகத்தால்  அங்கிகரிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன். ஆசிரியர்க் குழுவில் இடம்பெற்றுள்ள  நண்பர்கள் ஒவ்வொருவரையும் நன்கறிவேன். காலனீயத்தின் வடுவாக அறிவுலகில் ஒட்டியிருக்கும்  ஐரோப்பிய மைய நோக்கை மெல்லமெல்ல அகற்ற முயல்கிறீர்கள். மகத்தான பணி! .  இதழ் ...

எனக்குப் பிடித்த அருஞ்சொல்

திரு சமஸ் நடத்தும் அருஞ்சொல் இதழ் நான் விரும்பி வாசிக்கும் இதழ்களுள் ஒன்று. திரு சமஸ் அவர்களின் காந்திய ஈடுபாடு எனக்கு அவர் மீது மதிப்பு வரக் காரணம். ராமச்சந்திர குகா, பாலசுப்ரமணியம் முத்துசாமி உள்ளிட்டவர்களின் கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பேன்.  மெட்ராஸ் பேப்பரைப் போல இந்த இதழிலும் வெளிவரக்கூடிய உலக  அரசியல் பற்றியக்  கட்டுரைகளை கண்டிப்பாக வாசித்து விடுவேன். பன்னாட்டு அரசியல் குறித்த எழுத்துக்கு தமிழில் நிறைய தேவை இருப்பதாகக் கருதுகிறேன் கவனிக்கப்படாத சென்னை பகுதிகள் பற்றி வெளிவரும் கட்டுரைகளும் எனக்குப்  பிடிக்கும். அதே சமயம் இதழில் வெளிவரும் தீவிர பாஜக எதிர்ப்புக் கட்டுரைகளைத் தவித்து விடுவேன். யோகேந்திர யாதவ் கட்டுரைகள் மட்டும் இதில் விதிவிலக்கு.  அருஞ்சொல் இதழ் மென்மேலும் வளர வேண்டும் என்று மனமார விரும்புகிறேன், இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் அருஞ்சொல் இதழை வாழ்த்துகிறேன்! . 

எனக்குப் பிடித்த மெட்ராஸ் பேப்பர்

. பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பா ராகவன் எழுதிய டாலர் தேசம் என்ற புத்தகம் மிக மிகப் பரபரப்பாக பேசப்பட்டது‌  சென்னை புத்தகக் கண்காட்சியில் அதை  தூக்கி கையில் வைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் கீழே வைத்து விட்டேன்.  ஒரே காரணம் தான். பாட புத்தகங்களைப் படிக்கவே பலருடைய உதவியை நம்பி இருக்கும் எங்களுக்கெல்லாம், அவ்வளவு கனமான புத்தகத்தை யார் வாசித்துக் காட்டுவார்கள்?    டாலர் தேசம் புத்தகத்தை பெருந்தொற்று காலகட்டத்தில் கிண்டிலில் படித்தேன். தனியாக இருக்க நேர்ந்த நாட்களில் அவருடைய யதி நாவலைப் படித்தேன். பிறகு அவருடைய சில அரசியல் வரலாற்று நூல்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும்.  2022ம் ஆண்டில் மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. 2023 ஜனவரி முதல் தேதி நான் செய்த முதல் காரியம் மெட்ராஸ் பேப்பருக்கு ஆண்டுச்சந்தா கட்டியதுதான்.  அதில் வரும் உலக அரசியல் பற்றிய கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சப்ராஸ் அகமது எழுதும் கட்டுரைகள் மூலம் இலங்கை அரசியலை தொடர்ந்து அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவர் மற்ற நாடுகளின் அரசியல் விவகாரங்களையும் கட்டுரையாக எழு...

சொல்வனம் இதழுக்கு நன்றி

எஸ் திவாகர் கன்னடத்தில் எழுதிய சலா என்று சிறுகதை உறுதி என்ற பெயரில் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. , சிறுகதை ஜூன் 25 சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது. ஜூன் 25 எனக்கு ஒரு முக்கியமான நாள். இரண்டாவது மகன் அபிநவ பாரதியின் பிறந்தநாள். எனவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மேலும் ஒரு கூடுதல் செய்தி. சரஸ்வதி என்ற அம்மையார் அமெரிக்காவிலிருந்து அழைத்திருந்தார். அவர் சிறுகதையை ஒலிப்பதிவு செய்து வலையேற்றியிருந்தார்.  அமெரிக்காவில் தமிழ் பேசத் தெரிந்து வாசிக்கப் பொழுது கிடைக்காத நண்பர்களுக்காக இந்த பணியை முதுமையிலும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான் எத்தனை வழிகள். சரஸ்வதி அம்மையாருக்கு  வணக்கங்கள்.  நண்பர் சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்தப் பணியில் எனக்கு உதவினார். பேராசிரியர் சிவக்குமார் திராவிடப்  பல்கலைக்கழக துளுவியல் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். அவரும் இந்தப் பணியில் என்றுடன் நின்றார் இருவருக்கும் என் நன்றியும்,அன்பும்.  சொல்வனம் ஆசிரியக்குழுவுக்கு என் நன்றி. இணைய வாசிப்பு எனக்கு சாத்தியமான காலத்தில் அறிமுகமான இதழ் சொ...