சிந்தை கவர வேண்டும் சிந்தை

அருஞ்சொல் இதழ் நின்றபோது மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அது தொடர்பாக இதே வலை பக்கத்தில் ஒரு சிறு குறிப்பையும் எழுதியிருந்தேன். புதிய தலைமுறை குழுமம் சார்பில் சிந்தை என்ற இதழ் தொடங்கப்பட்டிருப்பதை மிகவும் அண்மையில் தான் அறிந்து வாசிக்கத் தொடங்கினேன். அருஞ்சொல் இதழில் இடம்பெற்ற அதே வகை உள்ளடக்கங்கள். மெட்ராஸ் பேப்பர், அருஞ்சொல் ஆகிய இதழ்களில் வெளிநாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை விரும்பி வாசிப்பது என் வழக்கம். 
இன்று மே 3. . இன்று மட்டும் அருஞ்சொல் இதழில் இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன.‌ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு பெரிய சக்தியாக நடிகர் விஜயுடைய கட்சி இருக்கும் என்ற பொருளில் இதழியலாளர் திரு. சமஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக மீதான விமர்சனம் சமஸ் எழுத்துக்களில் தற்போது கூடுதலாகவே இருக்கிறது.. இது வரவேற்கத்தக்க நிகழ்வு. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் ஜனநாயகத்தில் இருக்க முடியாது என்ற நம்பிக்கையே நம்மைத் தொடர்ந்து செலுத்தும் உந்து சக்தியாக ஜனநாயகத்தில் உள்ளது. 

         அருஞ்சொல் இதழை நான் ஒவ்வொரு நாளும் பின் தொடர்ந்ததற்குக் காரணம் அது முன்வைத்த தீவிரமான வலதுசாரி எதிர்ப்புப்பார்வை. அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனியாகவே 300 இடங்களை பெற்றுவிடும் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் சமஸ் அடித்துச் சொல்கிறேன் பாஜக 300 இடங்களை நிச்சயம் ஜெய்க்காது என்று அருஞ்சொல் இதழில் கட்டுரை எழுதியிருந்தார்.
இந்தத் தீவிரத்தை சிந்தை இதழிலும் சமஸ் தொடர்ந்தால் ஒரு வாசகனாக நான் நிறைவடைவேன். ‌ ஆனால் புதிய தலைமுறை ஊடகத்தை நடத்தும் குடும்பத்தினர் பா. ஜ. க தலைமையேற்று நடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். 
இதழியலாளர் சமஸ் அவர்களால் திமுக மீது வைப்பது போன்றே தீவிரமான விமர்சனத்தை தற்போது பாஜக மீதும் வைக்க முடியுமா? 
முடிய வேண்டும். 
 சிந்தை கவர வேண்டும் சிந்தை! 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்