யுகாதிப் பரிசுகள்

இன்று தெலுங்குப் புத்தாண்டு நாள். குப்பம் செல்வதற்கு முன்பும் வீட்டில் இந்த நாள் கொண்டாடப்படுவதுண்டு என்றாலும் ஆந்திராவுக்குச் சென்று குடியேறிய பிறகு இந்த நாளுடன் ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டு விட்டது. காரணம் மனதுக்கு நெருக்கமான பல நண்பர்கள் இந்த நாளை மிகவும் உற்சாகமாக எதிர்கொள்வார்கள் என்பதுதான். தெலுங்குப் பண்பாட்டை, இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இந்த நாள் இன்னும் பிடித்துப் போய்விட்டது. இதோ என் அன்பிற்குரிய கன்னட நண்பர்களுக்கும் தெலுங்கு நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச்  சொல்ல வேண்டும்.  
இந்த நாள் எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு அல்புனைவு நூல்களுடன் மலர்ந்திருக்கிறது. கதா விலாசம், துணை எழுத்து, எனது இந்தியா, தேசாந்திரி ஆகிய புத்தகங்களுடன் இந்தப்‌புத்தாண்டை  வரவேற்கிறேன். எல்லா மங்களத்துடனும் புத்தாண்டு வருக! ஆம்! அவ்வாறே  நிகழும் என்பதற்கு இந்த நூல் மங்கலமே சான்று! 
என் கன்னட நண்பர்களை இப்படி வாழ்த்துகிறேன் 
ಹೊಸ ವರ್ಷದ ಶುಭಾಶಯಗಳು

Comments

Popular posts from this blog

தலையாலே தான் தருதலால்

நீலி இதழுக்கு நன்றி

மற்றும் ஒரு மைல்கல்!