நானும் ஒரு சார்பு நூல் ஆசிரியன்

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் சிங்கப்பூரில் வழங்கிய உரைகளை எழுத்தாளர் பரிமித்தா தொடர்ந்து  அவருடைய வலைப்பக்கத்தில் ஆவணப்படுத்தி வருகிறார். 

https://parimitaa.blogspot.com/2024/02/6.html

சுனில் அவர்களின் கருத்துக்களை தொகுத்து சூரிய மண்டலத்திற்கும் நவீன தமிழ் இலக்கியச் சூழலுக்கும்  உள்ள ஒப்புமைகளை விளக்கி அண்மையில் பரிமித்தா எழுதியிருந்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கோணத்தில் தமிழ் மரபிலக்கியத்தையும் விளக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இன்று மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். 
இதற்காக நான் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கும் பரிமித்தாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 
வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்
முனைவன் கண்டதே முதல் நூல் என்று தமிழ் மரபு சொல்கிறது. 
தூய அறிவின் விளைவால் குற்றமின்றி பிறப்பதே முதல் நூல். அந்த முதல் நூலை விளக்கவும் விரித்தெடுக்கவும் மற்ற நூல்கள் முயலலாம். அவ்வாறு முயலும் நூல்களுக்கு வழிநூல் என்று பெயர். வழி நூலை விளக்கும் வண்ணமும் நூல்கள் பிறக்கலாம். அப்படிப்பட்ட நூல்களுக்கு சார்பு நூல்கள் என்று பெயர். 
சுனில் முதல் நூல் ஆசிரியர் என்றால், அவரை விளக்கும் பரிமித்தாவின் முயற்சி வழிநூல் ஆசிரியரின் பணி என்றால், நான் யார், என்னுடைய பணிதான் என்ன?
நான் என்னை சார்பு நூல் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்ளலாமா! 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்