இவருக்கு எத்தனை கரங்கள்?

நண்பர் பொருநை க .மாரியப்பனுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பில் ஈடுபாடு அதிகரித்தது. மகாவித்வான் என்ற அவருடைய முதல் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.  
அதன் பிறகு படிக்கட்டுகளில் பாய்ந்து ஏறுகிறார். 
தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் சிறுகதைகளை அத்தங்கிமலை என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் வெளியீடு. இந்தத் தொகுப்புக்கு அருட் செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மகாத்மா பிறந்த நாள் . சென்னையில் நண்பருக்கு பரிசு வழங்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை முடித்து தமிழின் முதன்மையான பதிப்பகம்  ஒன்றின் மூலம் வெளியிடயிருக்கிறார். இன்னொரு மொழிபெயர்ப்பு நாவல் பாதி நிறைவடைந்த நிலையில் இருக்கிறது. சாகித்ய அகாடமிக்காக மற்றொரு   மொழிபெயர்ப்பு சிறுகதைத்  தொகுப்பு வெளிவரவிருக்கிறது. மதுராந்தகம் நரேந்திரா எழுதிய புகழ்பெற்ற நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு முயற்சி வேறொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோக பேராசிரியர் பி .திருப்பதி ராவ் எழுதிய நூல் ஒன்றை தமிழ்ப்படுத்தும் முயற்சி.  (கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்கிறேன்)
பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் கூடுதல் பொறுப்பு, மாணவர் விடுதியில் கூடுதல் பொறுப்பு, முன்னாள் மாணவர் சங்கத்தில் கூடுதல் பொறுப்பு, திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த்துறை youtube அலை வரிசையை நடத்தும் கூடுதல் பொறுப்பு, இவற்றுடன் மாலை பாப்பாவை கவனித்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பு.
வேலவனுக்கு பன்னிரு கரங்கள்
இவருக்கு எத்தனை? 
யாராவது எண்ணிப் பார்த்து சொல்லுங்களேன்
கரங்கள் பெருகட்டும்!!!!

Comments

  1. Replies
    1. நேரம் ஒதுக்கி வாசித்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      Delete
    2. சார்ங்கம் உதைத்த சரமழைபோல் எண்ணருங்கரமுடையதே மாரி

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

தலையாலே தான் தருதலால்