குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்
எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork Muse என்பதாகும்.
படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது.
சமூகவியல் பேராசிரியராகிய ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்தைக் கையாள வேண்டும் என்று எடுத்துரைக்கின்றன. மூன்றாவது இயல் எழுத்தின் புற வடிவங்களுக்கும் எழுதும் பணிக்கும் இடையில் உள்ள உறவு பற்றி விவாதிக்கிறது. ஓர் எழுத்து திட்டத்தின் தொடக்கத்தில் எத்தகைய மனநிலை அமையும், அதன் இடைப்பகுதியிலும் இறுதியிலும் எப்படிப்பட்ட மனநிலை நமக்கு அமையும், முதல்வரைவை எப்படி எழுத வேண்டும், இரண்டாவது எழுத்து வரைவை எவ்வாறு செம்மைப் படுத்த வேண்டும் என்று இந்த மூன்றாம் இயல் ஆராகிறது. இறுதி இயலான ஐந்தாவது இயலில் எழுத்து சார்ந்து சில பொதுவான ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. சுமார் நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் சிறிய நூல் தான் இது. இந்த நூலை அறிமுகப்படுத்தி மாணவர்களுடன் 12 ஆகஸ்ட் 2026 புதன்கிழமை பிற்பகல் 3. 30 மணி அளவில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறேன்.
மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
அன்றைய நாளுக்காக காத்திருக்கிறோம் ஐயா
ReplyDelete