எழுத்தாளர் சி. முத்துக் கந்தன் நாவல்கள் குறித்து பேசுகிறேன்

பேராசிரியர் சி முத்துக்கந்தன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் எங்களுடன் படித்தார். எங்களுக்கு சில ஆண்டுகள் இளையவர் அவர். சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ் துறையில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். அடிமரம், அகன்ற பேழை, வேறு யாருக்கும் அனுமதி இல்லை ஆகிய மூன்று நாவல்களை முத்து எழுதியிருக்கிறார்.  இந்த நாவல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. பழங்குடி இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு எழுத்துப் பயிற்சி வகுப்புகளையும்  முத்துக்கந்தன் நடத்துகிறார். 
எழுத்தாளர் சி. முத்துக்கந்தன்  அவர்கள் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை சார்பில்  நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று  உரையாற்றுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறை சார்பில் ஏப்ரல் 9 வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பர்களைச் சந்திக்க ஆசையாக இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்