நான் உரையாற்றுகிறேன்

கம்பராமாயணக் கூட்டு வாசிப்பின் பகுதியாக சுந்தரகாண்டம் வாசிப்பு நிறைவடைந்து விட்டது.  காண்டத்தின் சாரத்தைத் தொகுத்துக் கொள்ளும் நோக்கில் இன்றுமுதல் உரைகள் தொடங்குகின்றன. பிணி வீட்டுப் படலம் குறித்து நான்  வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றுகிறேன்
 
படலத்தை சுருக்கிச் சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். அனுமன் இராவணனுக்குச் சொல்லும் அறிவுரைகளை நன்கு விளங்கிக் கொள்ள காப்பியத்தில் இடம் பெற்றுள்ள மற்ற அறிவுரைப் பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று நண்பர் ஸ்ரீனிவாஸ் சொல்லிவிட்டார். 
எனவே அவற்றையும் படித்துக்கொண்டு  வருகிறேன். 
இந்த வாத்தியார்  ஸ்ரீநிவாஸ் நிறைய நிறைய வீட்டுப்பாடம்  கொடுக்கிறார்! வாழ்க ! 
உரை எப்படி அமைகிறது என்று பார்க்க வேண்டும். 
வெள்ளிக்கிழமை சந்திப்போம்! நண்பர்களின் உரைகள் யாவும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்