இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் பக்கத்திலிருக்க ஒரு தென்னங்கன்றை நட்டு வைக்கும் நல்வாய்ப்பு அமைந்தது. வாழ்வில் முதல் முறையாக ஒரு தென்னம்பிள்ளையை கையில் ஏந்தினேன். மாணவர் பாரதிராஜா ஈரோடிலிருந்து கொண்டு வந்தது. பல்கலைக்கழகத்திற்கு ஒரு பரிசை வழங்கி விட்டு செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. மிகவும் நிறைவான நிமிடங்கள். பாரதிராஜா நம்முடைய பல்கலைக்கழகத்தில் முதுகலை பயில்கிறார், பல்கலைக்கழக புதிய சூழல் பிடிக்கவில்லை என்று சொல்லி சேர்ந்த சில நாட்களிலேயே திரும்பிச் சென்று விட்டார். அவர் திரும்பி வந்துவிட்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் சில மாணவர்களின் உடன் இருப்பே போதும்! பாரதி அதிகம் பேச மாட்டார். ஆனால் நன்றாக ஓவியம் வரைவார். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெறும் வாராந்திர கருத்தரங்கில் ஒரு முறை தன்னுடைய ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். கல்வி முடித்துச் செல்லும்போது ஒரு நினைவை பல்கலைக்கழகத்தில் விட்டுச் செல்ல வேண்டும் என்று பாரதிராஜாவுக்குத் தோன்றியிருக்கிறது. மூன்றாம் வகுப்பில் இந்த வெண்பா பாடமாக இருந்தது. நன்றி ஒருவருக்குச் ச
கன்னட எழுத்தாளர் வைஷாலி ஹெகடே எழுதிய சிறுகதை ஒந்து மத்தியானத மீட்டிங். இந்தச் சிறுகதையை. ஒரு நண்பகல் சந்திப்பு என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். சிறுகதை பிப்ரவரி மாத நீலி இதழில் வெளி வந்திருக்கிறது. . சிறுகதையை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் வைஷாலி ஹெகடே அவர்களுக்கும், நீலி இதழில் வெளியிட்ட எழுத்தாளர் ரம்யா அவர்களுக்கும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்த திராவிடப் பல்கலைக்கழகத் துளுவியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் பி எஸ் சிவகுமார் அவர்களுக்கும் சிறுகதையை வாசிக்கவிருக்கும் உங்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இணைப்பு கீழே https://neeli.co.in/2677/ அறிமுகம் இதழ்கள் Home சிறுகதை ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே February 1, 2024 – தமிழில்: கு. பத்மநாபன் வைஷாலி ஹெகடே (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார். இலக்கியம்
இன்று 31 ஜனவரி 2024. கம்பராமாயண கூட்டு வாசிப்பின் 350ஆவது அமர்வு. உண்மையில் கலந்துகொள்வேன் என்று நினைத்திருக்கவில்லை. எழுத்தாளர் பார்கவி அவர்கள்தான் நினைவுபடுத்தினார். நண்பர்கள் சிறப்பாக வாசிப்பை நிகழ்த்தினார்கள். அடுத்தென்ன? 375. அப்புறம்? 400! ஏனென்றால் இது இம்பர் வாரி, வாரி என்பதற்கு முடிவேது! அனைத்திற்கும் நன்றி நண்பர்களே!
Comments
Post a Comment