சாலையொர சந்திப்புகள்

கடிகார முட்களுக்கு 
  பயப்படாமல் காத்திருக்கும். 
பக்கத்துத் தெருவில்
எனது
தடியொசை   கேட்கும் போதே
எனக்குக் கேட்கும்
உறுமல் சத்தம். 
குரலைக் கேட்டே 
எதையும் புரிந்து கொள்ள முடியும். 
நான் அடிக்கவும்
அது கடிக்கவும்
போவதில்லை
என்றாலும்
சடங்குக்குக் குறைப்பவைகளை
சந்திக்கும்போதெல்லாம்
ஏதாவது கவிதை எழுத வேண்டும்
என்று
மனசுக்குள் உறுத்தும்! 
 நான் படித்த சென்னை கிருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு கவிதை சந்திப்பு நிகழும். திறந்த வெளியில் மரத்தடியில் புல்வெளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் வட்டமாக உட்கார்ந்து கவிதைகளை வாசித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது  வழக்கம். இலக்கியம் சார்ந்த எனது நுண்ணுணர்வு வகுப்பறைக்கு இணையாக  ஏன் மேலாகவும் கூட அந்த சந்திப்புகளில் வளர்ந்திருக்கிறது  என்று சொல்வேன். பிற்காலத்தில் தொலைக்காட்சி திரைப்படம் சிற்றிதழ்கள் முதலிய பல்வேறு ஊடகங்களில் முக்கியமான பங்களிப்பைச் செய்த சிலர் அப்போது இளைஞர்களாக எங்களுடன் வெள்ளிக்கிழமை கவிதை சந்திப்புகளில் பங்கேற்றார்கள். நிகழ்வை முன்னெடுத்த ஆசிரியர் பாரதி புத்திரன் அவர்களை வணங்குகிறேன். அத்தகைய சந்திப்பு ஒன்றில் 1995 - i 2000 காலகட்டத்தில்  என்னுள் எழுந்த கவிதை இது.  

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்