முதல் கவிதை

பாரத நாடு பழம்பெரும் நாடு
பண்புள்ள மாந்தர் வாழும் நாடு
பண்பும் பரிவும் மிக்க நாடு
பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடு
சாதி சமயம் கடந்த நாடு
ஜனநாயகம் ஓங்கிய நாடு
வாழ்க நாடு நம் நாடு
வெற்றி நடை போடும் பாரத நாடு
இது ஏழாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கவிதை என்று நினைவு. இந்தக் கவிதை என்னால் எழுதப்பட்டதா இல்லை நான் படித்த பாட புத்தகத்தில் இருந்ததா என்று இப்போது சரியாக சொல்ல முடியவில்லை. நடுவில் ஒரு வரியை கூட இப்போது நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன்.
ஆனால் ஒரு நாள் அதிகாலை வேளையில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்ததும் அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு கவிதை எழுதுகிறேன் என்று சொன்னது மட்டும் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 
ஆமாம், நிஜம்தான். 
ஒரு நாள் அதிகாலை கவிதை எழுத உட்கார்ந்திருக்கிறேன்! 
 அதை சொல்லத்தான் இந்த  கவிதையை நினைவு படுத்திக் கொண்டேன். 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்