எஸ் எல் பைரப்பாவின் சுயசரிதை புகழ்பெற்ற ஒன்று. காலச்சுவடு இதழில் எஸ் எல் பைரப்பா அவர்களின் மறைவு சந்தர்ப்பத்தில் தாம் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் இந்த சுயசரிதை குறித்து எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் வாழ்வை ஏதோ ஒரு வகையில் பிளேக் நோய் பாதித்திருக்கிறது. யூ ஆர் அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலில் பிளேக் பற்றிய மனம் நடுக்கும் காட்சிகள் உள்ளன. பைரப்பாவின் வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. மரணங்கள் ,மரணங்கள் , மரணங்கள் ஒரே நாளில் இரண்டு மணி நேரத்திற்குள் அண்ணன் அக்கா ஆகியோரின் மரணங்கள். பிறகு சுசிலா என்னும் ஒன்றரை வயது தங்கையின் மரணம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு நாளில் வந்து சேரும் அம்மாவின் மரணச் செய்தி. அம்மாவின் மரணத்திற்கும் ப்ளேக் தான் காரணம். ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் இடம்பெறும் நஞ்சம்மா யாரும் இல்லை என்னுடைய அம்மா கௌரிதான் என்று பைரப்பா வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். அம்மா இறந்து போன தருணத்தில் மனநிலைப் பிற...
பல்கலைக்கழகத்தில் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் இருந்து என்னுடைய நூல்களை கொண்டு வந்து மாணவர்கள் அடுக்கி வைத்தார்கள். என்னுடைய அறையில் இடம் இல்லை என்பதால் நண்பர் விஷ்ணு குமரன் அறையில் ஒரு பீரோ நிறைய என்னுடைய நூல்களை வைத்திருந்தேன். இன்று ஜனவரி 24, 2026 காலை 10 மணி முதல் இந்த வேலைதான். நூல்கள் அடுக்கப்படும்போது சிலவற்றை எடுத்து தலைப்பைவாசிக்கவைத்துக் கேட்டேன். ஏதேதோ நினைவுகள். என்னுடைய அப்பா எனக்காக வங்கியில் ஆர் டி போட்டு புத்தக கண்காட்சிக்கு பணம் கொடுக்கும் ஞாபகம், புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகு அம்மா புத்தகங்களில் என் பெயரையும் வாங்கப்பட்டதேதியையும் எழுதி வைக்கும் திருவிழா ஞாபகம் அபிதான சிந்தாமணி வீட்டிற்கு வந்த ஞாபகம், பகவத் கீதையின் முதன்மையான உரைகளை விஸ்வநாதன் சார் வாசிக்க எடுத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்து கொடுத்த ஞாபகம். மாணவர்கள் சில புத்தகங்களை ஆசையுடன் கேட்டு எடுத்துச் சென்றார்கள். நாலாயிரத் திவ்ய பிரபந்த நூல் தொகுதியில் ஒரே ஒரு நூல் மட்டும் எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லப்பட...
எழுதுவது எப்படி என்று கற்பிக்கும் நூல்கள் மீது எனக்கு ஈடுபாடு அதிகம். கல்விப்புல எழுத்துமுறையைக் கற்பிக்கும் நூல்களைப் பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் Bookshare.iog என்ற இணைய நூலகத்திலிருந்து தேடித்தேடி வாசித்திருக்கிறேன். தற்போது கிடைத்த நூல் Eviater zerubavel எழுதிய The clockwork Muse என்பதாகும். படைப்பாற்றல் தானே பொங்கி ப் பிரவாகிக்கும் என்ற கூற்றை இந்த நூல் மறுக்கிறது. மாறாக, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து திட்டமிட்டு முயன்று நாம் எழுதினால் நம் எழுத்தின் தரம் மற்றும் அளவு இரண்டுமே அதிகமடையும் என்று இந்த நூல் வாதிடுகிறது. சமூகவியல் பேராசிரியராகிய ஈவியாடர் ஸெருபவெல் எழுதிய The Clockwork Muse என்ற நூல் 5 இயல்களைக் கொண்டுள்ளது. முதல் இயல் ஆமை முயல் கதையின் அமெரிக்க வடிவமாக உள்ளது. ஆமை முயலை முந்துவது போன்று நாமும் தொடர்ந்து முயன்றால் நிறைய எழுதலாம் என்று இந்த இயல் கூறுகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது இயல்கள் பெரிய எழுத்துத் திட்டங்களை மேற்கொள்ளும்போது முன்னெடுக்கும் போது எவ்வாறு நேரத்த...
Comments
Post a Comment