இருக்கிறது, ஆனால் தொலைவில்

  ஒருபால் திருமணம் குறித்த வழக்கை மாண்பமை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது, நாடாளுமன்றமே இது தொடர்பாக  தீர்மானம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று  மாண்பமை உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.  
வருத்தமாக இருக்கிறது  இது. மத விழுமியங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் பொதுவாக அரசியல் கட்சிகள் குறிப்பாக தற்போதய ஆளும் கட்சி ஈடுபடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது . 
நாடாளுமன்றத்தில் திரு சசிதரூர் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை  காங்கிரஸ் கட்சியே ஆதரிக்காதநிலையில் பாஜ க பற்றிப் பேசுவதே பிழை. 
எனக்கு ஒரு மாணவரைத் தெரியும். பெண்களுடன் இருப்பதிலேயே அவர் நிறைவாயிருந்தார். பெண்களும் அவரை அவ்வளவு நெருக்கமாக உணர்ந்தார்கள். அவர் வீட்டில் பெண்களின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறார் என்ற செய்தி அப்புறம் தெரியவந்தது. அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் சொல்லும் செய்திதான்  என்ன? 
ஒருவர் தம்மை எப்படி உணர்கிறார் என்பது முற்றிலும் அவர் கையில் தான் இருக்கிறது என்று சொல்வது தவறு. . அது அவரையும் கடந்தது.  நாம் ஒருவரை எப்படி அழைக்க வேண்டும் என்பதைக் கூட அவரிடம் கேட்டுவிட்டுத்  தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் காலத்தில்தான் இப்படியும் நிகழ்கிறது. 
இனி எல்லாம் முதலிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமா என்ன?  
மனிதர்களை அல்ல, மனங்களை வெல்வதே சிறந்தது என்று மகாத்மா நிருவியிருக்கிறார். எனவே நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை. 
 கிழக்கு உதிக்காமல் போகாது. 
, வெகு தொலைவினில் என்றாலும், உருதியாக  இருக்கிறது அது! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்