அடியேனும் வந்து விட்டேன்

நண்பர்கள் நேற்று கடல் தாவு படலம் நிறைவு செய்தார்கள்  பத்து மணிக்கு பிறகும் மூன்று பாடல்கள் எஞ்சியிருந்தன.  இருந்தாலும் முயன்று படலம் நிறைவு செய்யப்பட்டது. 
ஒவ்வொரு வாரமும் வாசிக்க வேண்டிய பாடல்களை அந்தந்த வாரத்துக்குள்ளேயே முடித்துவிடும்  வழக்கம் இந்த முறை தவறிவிட்டது. நேற்று அனுமன் இலங்கையை அடைந்த காட்சியை வாசிக்கும் போது நான் அனுமன் மைநாகம் சந்திப்புப் பகுதியிலிருந்தேன். அடுத்து ஊர் காட்சிப்படலம் இது இப்படியே போனால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும். 
இன்று காலை எழுந்ததும் விடுபட்ட பாடல்களை முதலில் வாசித்து விட்டேன். 
ராபர்ட் பாய்ஸ் என்ற பிரிட்டிஷ் உளவியலாளர் எழுத்துப் பழக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளால் அறியப்பட்டவர். 
அறிவும் ஆற்றலும் மிக்க பேராசிரியர்கள் சிலர் ஏன் போதுமான அளவு எழுதுவதில்லை என்ற கேள்வியை அவர் எதிர்கொண்டார் ‌ 
அவருடைய முடிவு சுவாரஸ்யமானது. 
எப்போதாவது எழுதுவேன், நிறையபக்கங்கள்  எழுதுவேன், அதிக நேரம் எழுதுவேன்
என்று சொல்பவர்கள் ஒரு தரப்பு. 
தினம் தோறும் எழுதுவேன், குறைந்த நேரம் எழுதுவேன், குறைந்த அளவே எழுதுவேன், என்று சொல்பவர்கள் இன்னொரு தரப்பு. 
இந்த இரண்டு தரப்பிலும்  குறைந்த பக்கங்களே ஆனாலும் அன்றாடம் எழுதக்கூடியவர்கள் ஒட்டுமொத்தமாக  அதிகம் எழுதுகிறார்கள். இதுதான் பாய்ஸ் கண்டுபிடித்த விஷயம். என்னுடைய இயல்புக்கு இந்த முடிவு அப்படியே  பொருந்திவருகிறது. ராபர்ட் பாய்ஸ் புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். எழுதுதல்  என்ற பழக்கம் அதிகரிக்க அவர் கூறும் காரணங்களில் ஒன்று புறச்சூழலின் தூண்டுதல். 
இம்பர் வாரியில் நான் வந்து இணைந்த போது நண்பர்கள் பாலகாண்டம் முதல் 500 பாடல்களை கடந்திருந்தார்கள். பாலகாண்டத்தின் எஞ்சிய பாடல்கள், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம் இவற்றை முடித்த  நான் இன்னும் அந்த 500 பாடல்களை வாசிக்கவில்லை. இதுதான் புறச்சூழலின் தூண்டுதல் என்பது. ஒருவேளை பாலகாண்டத்தின் முதல் 500 பாடல்களை வாசிக்கயிருப்பதாக நாளையே அறிவிப்பு வந்தால் நான் விடுபட்ட பாடல்களை வாசிக்கத் தொடங்கலாம்
கம்பராமாயணம் என்னும் கடல் தாண்டச்செய்கிறீர்கள்
நன்றி நண்பர்களே! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்