இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மோகன் கூப்பிட்டு அதைக் கூறியபோது அதிர்ச்சி, எரிச்சல், துக்கம் ,ஏமாற்றம் எல்லாமும் ஆக இருந்தது. திங்கட்கிழமை காலை அவர் விளையாட்டாக என்னுடன் தெலுங்கில் பேசிக் கொண்டிருந்தார். இது உண்மை என்றால் வியாழக்கிழமை அவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளத்தான் விருப்பமில்லை. நம் விருப்பமெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை என்பது வேறு கதை. செய்யாறு கல்லூரியில் அவர் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் காலத்திலிருந்தேஅறிமுகம் உண்டு என்றாலும், அப்பா இல்லாமல் அழுத என் அன்புத் தங்கை உமாவுக்கு (பேராசிரர் அ மோகன் அவர்களின் மனைவி) அவர் பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுத்ததை அறிந்த போது தான் அவர் மீது எனக்கு இன்னும் அன்பும் மதிப்பும் அதிகரித்தது. சம்பிரதாயத்துக்காக ஒரு முறை மட்டும் அது கொடுக்கப்படவில்லை. அண்ணனுடைய சீர் உமாவை வந்து சேர்வது வருடம் தோறும் நிகழும் ஒரு வழக்கமாக இருந்தது. . நண்பர் ஒருவரின் முனைவர்ப் பட்டம் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொள்ள அமைந்தது. இயல்பாகவே சிலருடன் மனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. எனக்கு அப்படி ஒரு அந்தரங்கமான நெ...
Comments
Post a Comment